மாருதி சுசூகியின் ஐகானிக் பல்வகைப் பயன்பாடு கொண்ட ஈகோ வேன் தனது பெருமைமிகு 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதன் மொத்த விற்பனை 7 அலகுகள் என்பதுடன் வேன் பிரிவு சந்தையின் 90% பங்குடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. இதன் நடைமுறை, விசாலமான வடிவமைப்பு மற்றும் ஆற்றல்மிகு செயல்பாடு காரணமாக மாருதி சுசூகி ஈகோ நாட்டின் வேன் பிரிவில் கடந்த பத்தாண்டுகளாக முன்னணி இடத்தைத் தக்க வைத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
குடும்பமாகப் பயணிக்க ஏற்ற ஊர்தி என்பதுடன் நம்பகமான வணிக வாகனம் என்னும் பெருமையையும் பெற்றது மாருதி சுசூகி ஈகோ. சம்மந்தப்பட்ட பிரிவில் அதிக மைலேஜ், கூடுதல் வசதி, ஆற்றல், குறைந்த பராமரிப்புச் செலவு, உயர்தரப் பாதுகாப்பு உள்ளிட்ட பன்முகப் பயன்பாடு கொண்ட வேன் என வலுவாக தடம் பதித்துள்ளது.
ஈகோ ஈடு இணையற்ற முன்னணி வாகனமாகத் திகழ 10 காரணங்கள்:
1. சம்மந்தப்பட்ட பிரிவில் முன்னிலை வகிக்கும் வகையில் அதிக மைலேஜ், கூடுதல் வசதி, ஆற்றல், குறைந்த பராமரிப்புச் செலவு, உயர்தரப் பாதுகாப்பு ஆகியவற்றுடன் அப்பிரிவில் 90% பங்கையும் ஈகோ வைத்துள்ளது.
2. வெர்சடைல் ஈகோ வணிக மற்றும் தனிப்பட்டத் தேவைகளை நிறைவு செய்கிறது. 50%க்கும் அதிகமான வாடிக்கையாளர் இந்த ஊர்தியை வணிகம் மற்றும் தனிப்பட்ட பயன்பாட்டுக்குப் உபயோகப்படுத்துகின்றனர்.
3. வசதி மற்றும் பயன்பாட்டின் சரியான கலவையாக விளங்கும் மாருதி சுசூகி ஈகோ 1.2 லி. பெட்ரோல் பிஎஸ்6 தரச் சான்றிதழ் பெற்ற என்ஜினுடன் 1 லிட்டருக்கு / 16.11 கிமீ எரிபொருள் சிக்கனம், 54கேடபிள்யூ@6000ஆர்பிஎம் ஆற்றல் / 98என்எம்@3000ஆர்பிஎம் டார்க் மற்றும் 20.88 கேஎம்/கேஜிசிஎன்ஜி, 46கேடபிள்யூ@6000எம்எம் ஆற்றல் / 85என்எம்@3000ஆர்பிஎம் டார்க் எனச் சிறந்த செயல்பாட்டை வழங்குகிறது.
4. ஈகோ முதன் முதலாக சம்மந்தப்பட்ட பிரிவில் மிகச் சிறந்த மற்றும் அதி நவீன பாதுகாப்பு அம்சங்களான ஒட்டுனர் ஏர் பேக், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், ரிவர்ஸ் பார்க்கிங்க் சென்சார், ஓட்டுனர் & இணை-ஓட்டுனர் சீட் பெல்ட் ரிமைண்டர் மற்றும் ஹை ஸ்பீட் அலர்ட் அமைப்புகள் ஆகியவற்றை முதன் முதலாக அறிமுகப்படுத்தி உள்ளது.
5. மாருதி சுசூகியின் மிஷன் க்ரீன் மில்லியன் இலக்கை மேம்படுத்தும் வகையில் ஈகோ நிலையான இயக்கத் தீர்வுகளை வழங்க உறுதி பூண்டுள்ளது. இந்த பிஎஸ்6 சிஎன்ஜி வேரியண்ட்-இல் தயாரிப்பின் போதே பொருத்தப்பட்ட அதாவது ஃபேக்டரி ஃபிட்டெட் எஸ்-சிஎன்ஜி அதிகபட்ச செயல்பாட்டையும், விரிவான ஒட்டும் வசதியையும், சீரான, மேடு பள்ளம், உள்ளிட்ட அனைத்து ரக சாலை நிலைகளிலும் தரும்.
6. நடைமுறை வடிவமைப்பு மற்றும் ஆற்றல்மிகு தொழில்நுட்பம் காரணமாக மிக உயரிய பிராண்ட் விழிப்புணர்வை ஈகோ பெற்றுள்ளது. 84% ஈகோ வாடிக்கையாளர்கள் முன்-தீர்மானிக்கப்பட்ட வாங்குவோர் ஆகும்.
7. நடைமுறை வடிவமைப்பு, ஆற்றல்மிகு அம்சங்கள் ஆகியவற்றுடன் ஈகோ நாட்டிலேயே 2019-20 ஆம் ஆண்டில் அதிக விற்பனை ஆகும் டாப் 10 வாகனங்களில் ஒன்றாகும்.
8. 66% ஈகோ உரிமையாளர்கள் கருத்து ・மற்ற வேன்களுடன் ஒப்பிடுகையில் நீண்ட தூரப் பயணத்துக்கு ஈகோ ஏற்ற வாகனம்・
9. சிக்கலின்றித் தங்கு தடையற்ற ஓட்டம் மற்றும் குறைந்த பராமரிப்புச் செலவு ஆகியவற்றுடன் ஈகோ 68% வளர்ச்சியைக் குறிப்பாக கிராமச் சந்தைகளில் பெற்றுள்ளது.
10. வாடிக்கையாளர் விருப்பமான தேர்வாக விளங்கும் ஈகோ 5-சீட்டர், 7-சீட்டர், கார்கோ, ஆம்புலன்ஸ் என 12 வேரியண்ட்களில் வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளை நிறைவு செய்யும்.
ஈடு இணையற்ற பத்தாண்டு காலப் பாரம்பரியப் பெருமையுடன் தனைக்கென ஒரு முக்கியத்துவத்தை உருவாக்கிக் கொண்டு பன்முகத் தன்மை அம்சங்களுடன் மாருதி சுசூகி ஈகோ தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.
தொடர்ந்து வளரும் வாடிக்கையாளர் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள ஈகோ அனைத்து வசதிகளுக்கான ஒரே ஊர்தியாகத் தனது இடத்தைத் தக்க வைத்து கொண்டுள்ளது. இந்தியாவின் அதிக விற்பனையாகும் மல்டி-பர்பஸ் வேனாக விளங்கும் மாருதி சுசூகி ஈகோ கூட்டாண்மை, நமபகத் தன்மை, திறன் ஆகிய தூண்களில் ரூ. 3,80,800 தொடக்க விலையில் உருவாக்கப்பட்டுள்ளது.