ஆகஸ்ட் மாத நிலவரப்படி சீனாவில் இந்த ஆண்டு கனரக வாகனங்களின் விற்பனை 85 சதவீத அளவிற்கு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸன் பிறப்பிடமாக சீனா இருந்தாலும் அதன் மையப் பகுதியாக தற்போது இந்தியாவும் அமெரிக்காவும் மாறியுள்ளது. இத்தொற்றிலால் பெரும்பாலான நாடுகளின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
அதிலும் குறிப்பாக இந்தியாவில் நாட்டின் பொருளாதாரம் வரலாறு காணாத அளவிற்கு சரிவடைந்துள்ளது. குறிப்பாக இதில் அதிக பின்னடைவை சந்தித்தது க்ஷ வணிக வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தான்.
அதில் கனரக வாகனங்களின் விற்பனையானது கடந்தாண்டை காட்டிலும் இந்த ஆண்டு 7 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் மாத நிலவரப்படி சீனாவில் இந்த ஆண்டு கனரக வாகனங்களின் விற்பனை 85 சதவீத அளவிற்கு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெய்ஜிங்கை தலைமையிடமாகக் கொண்ட வணிக வாகன உலகத்தின் (சி.வி.வொர்ல்ட்) சமீபத்திய அறிக்கையின் படி, சீனாவில் கனரக வாகனங்களின் உள்நாட்டு விற்பனை ஆகஸ்ட் மாதத்தில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதன் விற்பனையானது ஆண்டுக்கு 85% அதிகரித்து 1,28,000 யூனிட்டுகளாக உயர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த கனரக வாகனங்களின் விற்பனை இப்போது தொடர்ச்சியாக ஐந்து மாதங்களுக்கு ஆரோக்கியமான உயர்வைக் கண்டிருந்தாலும், ஜூலை மாதத்தை விட ஆகஸ்ட் மாத விற்பனை 8% குறைந்துவிட்டதாக தரவுகள் கூறுகின்றன.ஸ
2020 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில், கனரக வாகனங்களின் மொத்த உள்நாட்டு விற்பனை 1.1 மில்லியன் யூனிட்டுகளை எட்டியுள்ளது. இது கிட்டத்தட்ட இந்த ஆண்டில் மட்டும் 2,80,000 யூனிட்டுகள் விற்பனை அதிகரித்துள்ளது.
ஜனவரி-ஜூலை மாதங்களில் இதன் விற்பனை 30.5% வளர்ச்சி அடைந்த நிலையில் தற்போது ஆகஸ்ட் மாத முடிவில் 35% அதிகரித்துள்ளது.
Attachments area