சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது டி.வி.எஸ் மோட்டார் கம்பெனி. கடந்த ஆண்டில் 20 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாயை ஈட்டி உள்ளது. இது தனது வாகனங்களை 60 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமிதி செய்து வருகிறது. இதற்கென்று தனி நுகர்வோர் கூட்டமே உள்ளது.
இந்நிலையில் இந்த நிறுவனம் அண்மையில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் பாலிவுட் நட்சத்திரமான அமிதாப் பச்சனும், இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் தோனியும் இணைந்து நடித்துள்ளனர். அதில் அமிதாப் பச்சன் இந்தியாவில் முதன் முதலில் என்று கூறியிருப்பார். இது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்படி என்ன புது வித வாகனமாக இருக்கும் என்று தற்போதிலிருந்தே பல்வேறு யூகங்களும் கிளம்பி வருகின்றன. ஆனால் அந்த வீடியோ ஒரு சஸ்பென்ஸ் ஓடு முடிந்து விட்டது. என்ன வாகனம், எப்படி இருக்கப் போகிறது என்று எந்த விவரமும் தெரியவில்லை.
இந்த விளம்பரத்தின் மூலம் டி.வி.எஸ் மோட்டார் நிறுவனம் இதுவரை இல்லாத முற்றிலும் புதியதாக ஒன்றை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளனர் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. டி.வி.எஸ் மோட்டார்ஸ் கடைசியாக தயாரித்த இரு சக்கர வாகனம் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். கொரோனா பொதுமுடகத்திற்கு முன் இது பயன்பாட்டிற்கு வந்தது. இது வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
கடந்த சில நாட்களாக அமிதாப் பச்சன் மற்றும் தோனி தான் டிவிஎஸ் மோட்டர் வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். ஆகையால் இவர்கள் இருவரும் இணைந்து நடித்திருப்பதால் இந்த புதிய மாடலுக்கு மக்களிடையே எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்கிறது.