பிரபல நடிகை ராதிகா தனது பேரக்குழந்தையை கையில் ஏந்தியப்படியான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை ராதிகா தற்போது ஏணைய தமிழ படங்களில் ஹீரோவுக்கு தாய் கதாபாத்திரத்தில் தோன்றி கலக்கி வருகிறது. அதுமட்டுமின்றி சின்னத்திரையில் தனது சொந்த புரொக்ஷனால் தயாரிக்கப்பட்ட சித்தி நாடகத்தின் இரண்டாம் பாகத்தை தொடங்கியுள்ளார்.
90ஸ் கிட்ஸ் இன்றளவும் சித்தி என்ற வார்த்தையை கேள்விபட்டால் அவர்களுக்கு நியாபகம் வருவது ராதிகாதான் தற்போது 20ஸ் கிட்ஸ்-ன் மனதை கவர சின்னத்திரையில் சித்தி பாகம் இரண்டை தொடங்கியுள்ளார். சித்தி ஒன்றில் நடித்த பொன்வண்ணனுக்கு பதிலாக இதில் நிழல்கள் ரவி நடித்துள்ளார். இந்த எபிசோட்கள் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நாட்டாமை என்ற வார்த்தையை கேள்விபட்டால் சட்டென தோன்றும் பிரபல நடிகர் சரத்குமார் ராதிகாவின் கணவராவர். இவரின் மகள் வரலட்சுமி நடிகர் விஜயுடன் சர்கார், பாலாவின் தாரைதப்பட்டை போன்ற படங்களில் கலக்கியிருப்பார்.
இந்த நிலையில் இவர்களின் மூத்தமகளான ரேயானிற்கு சமீபத்தில் பெண்குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு ராதிகாவின் பெயரை ஒத்தார்போல் ராதியா என பெயர் வைத்துள்ளனர்.
பேரக்குழந்தையுடன் ராதிகா இருக்கும் புகைப்படத்தை ரேயான் இணையத்தில் பகிர்ந்துள்ளார். அதில் ராதி மற்றும் ராது என்னுடைய லட்சுமிகள் என குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்தை இணையவாசிகள் இரண்டு லட்சுமிகளும் அழகாக உள்ளனர் என கமெண்ட் செய்து வருகின்றனர்.