நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படத்தின் நெஞ்சமே எனும் இரண்டாவது பாடல் வெளிமாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ் சினிமாவில் தற்போதைய 2k கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த ஹீரோ இசையமைப்பாளர் காம்போ என்றால், அது சிவகார்த்திகேயன் அனிருத் தான்.
இவர்களது காம்போவில் வெளிவந்த எதிர்நீச்சல், மான்கராத்தே, காக்கிச்சட்டை,ரெமோ வேலைக்காரன் ஆகிய அனைத்து படங்களின் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகியது. ஒவ்வொரு முறை இவர்கள் சேரும்போதும் ரசிகர்களை இசை விருந்து கிடைப்பது உறுதி.
இந்நிலையில், நெல்சன் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் டாக்டர். சிவகார்த்திகேயன் பிரோடக்ஷனும் கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸூம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் எழுதி அனிருத் பாடிய செல்லம்மா செல்லம்மா எனும் பாடல் தற்போது பெரும்பாலான ரசிகர்களின் காலர் டியூனாக உள்ளது.
அந்த வகையில் அந்த படத்தின் நெஞ்சமே என்னும் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. பாடலாசிரியர் மோகன்ராஜ் அணிவது இல்லை பாடல் அனிருத் பாடியுள்ளார். அனிருத்தின் குரலில் ஒன் சைட் லவ்வை மையமாக உருவாகியுள்ள இப்பாடலை ரசிகர்கள் ரிப்பிட் மோடில் கேட்டு வருகின்றனர்.
Attachments area