விஜய் டிவியில் தனது பயணத்தை தொடங்கி வெள்ளித் திரையில் தற்போது தூள் கிளப்பி வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் அண்மையில் நடித்து வெளியான ஹீரோ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதற்கு அடுத்தப்படியாக இவர் டாக்டர் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை அவரது நண்பரும் இயக்குநருமான நெல்சன் இயக்குகிறார். மேலும் கூடுதல் சிறப்பாக அனிருத் இதற்கு இசையமக்கிறார். இவர்கள் கூட்டணியில் அண்மையில் பாடல் ஒன்று வெளியானது. டிக் டாக் தடை தொடர்பாக டாக்டர் செல்லமா என்ற பாடல் வெளியாகி வலைதளத்தில் வைரலானது.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் கதாநாயகி இன்ஸ்டாகிராம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இயக்குநர் புது முகம் அறிமுகப்படுத்த வேண்டும் என்று முன்பே முடிவு செய்திருந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் சிவகார்திகேயன் மூலம் அறிமுகமான பெண் தான் பிரியங்கா அருள் மோகன். இவர் கன்னடா, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தின் நடிகர் மட்டுமின்றி தயாரிப்பாளரும் ஆவார் சிவகார்த்திகேயன். கோலமாவு கோகிலா வெற்றிக்கு பின் நெல்சன் இயக்கத்தில் வெளியாகும் இந்த படம் ரசிகர் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்றுள்ளது. இது டிசம்பர் 6 ஆம் தேதி திரைக்கும் வரும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் வெளியீட்டை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.