ஜெயம் ரவி நடித்துள்ள பூமி படத்தில் இருந்து முதல் பாடல் ‘தமிழன் என்று சொல்லடா’ செப்டம்பர் 10 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரோமியோ ஜூலியட், போகன் படங்களை இயக்கிய லக்ஷ்மன் இயக்கத்தில் ஜெயம் ரவி தன்னுடைய 25 ஆவது படமான ‘பூமி’யின் வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார். இந்தப் படத்தில் நிதி அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ளார். ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்த பூமி படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு படக்குழுவினர் படத்திலிருந்து புதிய புகைப்படங்களை வெளியிட்டனர். மேலும் ஜெயம் ரவியின் பிறந்தநாள் பரிசாக செப்டம்பர் 10 ஆம் தேதி ரசிகர்களுக்கு ஒரு அற்புதமான ஆச்சரியம் காத்திருக்கிறது என்பதையும் வெளிப்படுத்தினர்.
ஆம்! பூமி படத்தில் இருந்து முதல் பாடல் ‘தமிழன் என்று சொல்லடா’ செப்டம்பர் 10 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாடல் தமிழனின் பெருமையைப் பற்றி பேசும் என்று தெரிகிறது. பாடகர் மற்றும் பாடலாசிரியர் தொடர்பான விவரங்கள் இன்னும் தெரியவில்லை.
ரவி மற்றும் நிதி அகர்வால் தவிர, இப்படத்தில் சதீஷ், ரோனித் ராய், தம்பி ராமையா, ராதாரவி, சரண்யா பொன்வன்னன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சூரரைப் போற்று படத்தின் ஓடிடி வெளியீட்டின் அறிவிப்பை தொடர்ந்து, பூமி படமும் ஓடிடியில் வெளியாகும் என்று வதந்திகள் பரவின், ஆனால் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் தயாரிப்பாளர்களால் வெளியிடப்படவில்லை.