நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தின் டீசர் வெளியாகி இணையத்தை ஒரு கலக்குகலக்கி வருகிறது.இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை வெளியான டீசர் எகிறவைத்துள்ளது என்றே கூறலாம். லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய் கண் தெரியாதவரை நடித்துள்ளார் என்ற ஒரு தகவல் வெளியானது.
படத்தின் ஒரு பாதி கண் தெரிந்தவராக நடிக்கும் விஜய், போதைக்கு அடிமையாகி கண்கள் தெரியாதவராக மாறுகிறார் என கூறப்படுகிறது. போதை கும்பலின் தலைவராக விஜய்சேதுபதி நடித்திருக்கிறார் எனவும் அவரை கண்டுபிடித்து பலிவாங்குவதே கதைக்கரு எனவும் கூறப்படுகிறது.
இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் விஜய்யின் 65-வது படம் இயக்குவது யார் என்ற அடுத்த தகவல்கள் இணையத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளது. முன்னதாக விஜய் 65 படத்தை இயக்க இருந்த ஏஆர் முருகதாஸ் சம்பள விவகாரம் தொடர்பாக படத்தில் இருந்து விலகிவிட்டார்.
இதையடுத்து விஜய்யின் புதிய படத்தை பேரரசு, கோலமாவு கோகிலா இயக்கிய நெல்சன் இயக்க அதிக வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டது. இந்த நிலையில் தளபதி 65 படத்தை எஸ்ஜே சூர்யா இயக்க உள்ளதாகவும். எஸ்ஜே சூர்யா சொன்ன கதை விஜய்யை கவர்ந்துள்ளதாகவும் இந்த படம் காதல், சஸ்பென்ஸ், அதிரடி என அனைத்தும் கலந்து இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
விஜய்யின் குஷி படத்தை எஸ்ஜே சூர்யா இயக்கி இருந்தார். அதுமட்டுமின்றி நண்பன், மெர்சல் போன்ற மெகாஹிட் படங்களில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.