கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடித்திருக்கும் திரைப்படம் தான் பிஸ்கோத். இந்த படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி இருக்கிறது. இதில் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்திருக்கிறார். டிரைலரை பார்க்கும்போது பாகுபலி திரைப்படத்தை ஸ்பூஃப் செய்தது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. இந்த படம் முழுவதும் சந்தானத்தின் அட்டகாசமான காமெடி காட்சிகளை எதிர்பார்க்கலாம் என்று தெரிகிறது. மேலும் இந்த ட்ரைலரில் தற்போதைய கொரோனா சூழலை குறித்தும் காமெடியான வசனங்கள் இடம் பெற்றிருக்கிறது. இதில் மொட்டை ராஜேந்திரன், சவுகார் ஜானகி, லொல்லு சபா மனோகர், ஆனந்த்ராஜ், உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் கதாநாயகியாக தாரா அலிஷா பெர்ரி மற்றும் சுவாதி முப்பாலா நடித்துள்ளனர். தாரா அலிஷா பெர்ரி கடந்த ஆண்டு வெளியான ஏ1 படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
2011 ஆம் ஆண்டில் திரைத்துறைக்கு என்ட்ரி கொடுத்த தாரா அலிஷா பெர்ரி இதுவரையில் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்திருக்கிறார். அவ்வப்போது வெப் சீரிஸ் மற்றும் குறும்படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் அண்மையில் நடித்திருக்கும் மஸ்தரம் என்ற ஹிந்தி வெப் சீரிஸ் வலைத்தளத்தில் அதிகம் பார்வையாளர்களை ஈர்த்திருக்கிறது. இதில் கதாநாயகியாக மிகவும் சிறப்பாக நடித்திருப்பார். இதன் மூலம் இவரின் ரசிகர் பட்டாளம் ஒரு படி மேலே உயர்ந்துவிட்டது என்றே கூறலாம்.
இதனையடுத்து இவர் நடித்து தற்போது வெளியாக இருக்கும் பிஸ்கோத் படத்திலும் ஒரு கலக்கு கலக்கி இருக்கிறார். இந்த திரைப்படம் ஊரடங்கு முடிந்த பின்னர் திரைக்கும் வரும் என்பதை எதிர்பார்க்கலாம். மேலும் இது ஓடிடி மூலமும் வெளியிடப்படலாம் ஏனெனில் ட்ரைலர் முடிவில் அவ்வாறு ஒரு வசனம் இடம்பெற்றுள்ளது.