லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் மாஸ்டர் திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வரவுள்ளது. இதன் இசை வெளியீட்டு விழா அண்மையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் சாந்தனு பாக்யராஜ், யோகி பாபூ உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். இந்த பட வெளியீட்டை எதிர்நோக்கி ரசிகர் பட்டாளமே காத்திருக்கிறது. முதல் முறை விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் இணைந்து ஒரே படத்தில் நடித்திருப்பதால் வரவேற்பு கூடுதலாகவே இருக்கிறது.
கொரோனா சூழல் காரணமாக படப்படிப்புகள் நடைபெற கடந்த மார்ச் 25 ஆம் தேதியிலிருந்து தடை விதிக்கப்பட்டிருந்தது. பிறகு அரசு சினிமா துறையிணர் தங்களது போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளை மட்டும் மே மாதம் முதல் தொடங்கலாம் என்று அறிவித்தது. இதனையடுத்து மாஸ்டர் திரைப்படத்தின் ட்ரெய்லரை பார்க்க சில நடிகர்கள் மற்றும் படக்குழவினர்கள் சிலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த ட்ரெய்லர் குறித்து கைதி திரைப்பட நடிகர் அர்ஜூன் தாஸ், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் மாஸ் என்று கூறியிருகின்றனர்.
அண்மையில் இந்த வாய்ப்பை தான் தவறவிட்டதாக சாந்தனு பாக்யராஜ் நாளிதழ் ஒன்றுக்கு வருத்தத்துடன் பேட்டியளித்துள்ளார். மேலும் அவர், லோகேஷ் பாக்யராஜ் என்னை ஸ்டுடியோவிற்கு வருமாறு அழைத்தார். ஆனால் நான் அது ட்ரெய்லர் வெளியீட்டுக்குத் தான் என்று அறியாமல் இருந்து விட்டேன். அப்போது நான் எடுத்துக் கொண்டிருந்த குறும் படத்தில் கவனம் செலுத்தியதால் இதனை தவறவிட்டதாகக் கூறினார்.