நவம்பர் 10 ஆம் தேதி தியேட்டர்கள் திறக்க திட்டமிட்டு வந்தாலும் தீபாவளிக்கு எந்த திரைப்பங்களும் தியேட்டரில் வெளியாகவில்லை. காரணம் முன்னதாகவே பல திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் வெளியிட ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதுதான்.
தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்பு அதாவது நவம்பர் 12 ஆம் தேதி சூரரைப் போற்று வெளியாக உள்ளது. இந்த படத்தை அமேசான் பிரைம் வெளியிடுறது. ஓரம்போ, இறுதிச்சுற்று போன்ற திரைப்படங்களை எடுத்த சுதாகொங்காரா இந்த படத்தை இயக்கியுள்ளார். இதில் சூர்யா கதாநாயகனாக கலக்கியுள்ளார்.
அதேபோல் தீபாவளித் தினத்தன்று ஆர்ஜே பாலாஜி இயக்கி நடித்துள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெளியாக உள்ளது. இதில் நயன்தாரா கதாநாயகியாக அம்மன் கதாபாத்திரத்தில் காட்சி தருகிறார். இந்த படம் நவம்பர் 14 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ளது.
அட்லீ தயாரித்து விக்னராஜன் இயக்கியுள்ள சஸ்பென்ஸ் த்ரில்லர் கலந்த படம்தான் “அந்தகாரம்”. இந்த படம் நவம்பர் 24ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தில் கைதி பட வில்லன் நடித்த அர்ஜுன் தாஸ், வினோத் கிஷன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஆக மொத்தம் மூன்று ஓடிடி தளங்கள் அணுகல் பெற்றால் மட்டுமே இந்த திரைப்படங்களை பார்க்க முடியும். பெரிய திரை சரவுண்டிங் சவுண்ட் என பல்வேறு அம்சங்களோடு 150 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை பணம் செலவழித்தாலும் திரைப்படத்தை திருப்தியோடு தியேட்டரில் பார்க்கலாம்.
அந்த நிம்மதி வீட்டில் இருந்து படம் பார்க்கும்போது கிடைக்குமா என்றால் அது சந்தேகம்தான். குறிப்பாக புது திரைப்படம் பார்க்க எல்இடி டிவி வேண்டும், அது இல்லாதபட்சத்தில் மொபைலில்தான் படம் பார்க்க நேரும். குழந்தைகள் சினுங்கல், கடைக்கு போய்ட்டு வா என்று அழைக்கும் தாய்மார்கள், அடிக்கடி வரும் போன்கால் என ஏணைய தொந்தரவுகளுக்கு மத்தியில்தான் படம் பார்க்க வேண்டும்.
Tamil Movie Flim’s News
அதையும்மீறி அமேசான் பிரைம் மெம்பராக மாற மாதம் ரூ.129 செலுத்த வேண்டும். ரூ.129 செலுத்தி அடிக்கடி படம் பார்க்கலாம் என்று நினைத்தால் அதற்கு இடையூறு இல்லா இணைய சேவை வேண்டும். டிவியின் அளவை பொருத்து இணைய தேவை மாறுபடும்.
டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் அணுகல் பெறுவதற்கு மாத பிளானாக ரூ.299 செலுத்த வேண்டும். இதற்கும் இணைய தேவை பிரதானம்தான். நெட்பிளிக்ஸ் மாத சந்தா விலை ரூ.199 முதல் ரூ.799 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காலத்தில் பல மாற்றங்களை சந்தித்து விட்டோம். இதில் திரைப்படங்கள் பார்ப்பதற்கு மட்டும் விதிவிலக்கா என்ன?