2017 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படம் இந்திய திரையுலகை ஒரு கலக்கு கலக்கியது. இதையடுத்து இந்த திரைப்படம் தமிழ், இந்தி மொழிகளில் ரீமேக் செய்தது. இந்த படத்தை விக்ரம் மகன் துருவ் விக்ரமை வைத்து பாலா இயக்கினார். முகேஷ் மேத்தாவின் இ4 எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்தது.
நடிகர் விக்ரமை சேது படத்தின் மூலம் பாலா அறிமுகப்படுத்தினார். அதேபோல் விக்ரம் மகனை திரையுலகில் பாலா அறிமுகப்படுத்த உள்ளார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது. அதேபோல் தன் மகனை பாலாதான் அறிமுகம் செய்ய வேண்டும் என்ற ஆசை விக்ரமிடமும் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
துருவ் விக்ரமை வைத்து பாலா இயக்கிய அர்ஜுன் ரெட்டி ரீமேக் படத்திற்கு வர்மா என பெயரிடப்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் அனைவரும் திரைப்படத்தை பார்வையிட்டனர். அதை பார்த்த தயாரிப்பாளர்கள் இந்த படம் எதிர்பார்த்த அளவு இல்லை மீண்டும் சில காட்சிகளை எடுக்க வேண்டும் என கூறினார். பாலா மறுப்பு தெரிவிக்கவே விக்ரம் பாலாவிடம் பேச்சு வார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து தயாரிப்பாளர் வேறு இயக்குனரை வைத்து மீண்டும் இந்த படத்தை வேறு கதாநாயகி வைத்து இயக்கி ஆதித்ய வர்மா என்ற பெயரில் வெளியிட்டார். இந்த படத்திற்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு இல்லை.
பாலா இயக்கிய வர்மா திரைப்படத்தை பார்க்க வேண்டும் என ரசிகர்கள் ஆவலோடு கூறவே இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. பாலா இயக்கிய வர்மா படம் எப்படி உள்ளது என பார்க்கலாம்.
ஒரு படத்தை ரீமேக் செய்யும்போது அப்படியே ஈஅடிச்சான் காபி போல் எடுத்தால் முறையாகவா இருக்கும் சில மாற்றங்கள் தேவைதான். அந்த ஹீரோ வேறு இந்த ஹீரோ வேறு இந்த ஹீரோவின் உடலமைப்பிற்கு ஏற்பவும் ரசிகர்களிடம் இந்த ஹீரோ கதாபாத்திரத்திற்கு இருக்கும் வரவேற்பையும் வைத்தே காட்சிகளை மாற்றியமைக்க வேண்டும்.
கதை மாறாமல் இருக்க வேண்டும் என்றால் காட்சி மாற்றியமைக்க வேண்டும். வர்மா திரைப்படத்தில் அழகாக சேதுவில் விக்ரமை பார்த்ததும் போன்றும் ஹீரோயின் கதாபாத்திரத்தை அபிதகுஜலாம்பல் போன்றும் காண்பித்து அழகாக இயக்கியுள்ளார்.
அனைத்து கதாபாத்திரத்திற்கும் தகுந்த இடங்கள் கொடுத்து, குறிப்பாக குடும்பத்தோடு தொடர்புள்ளபடி வேலைக்காரப் பெண் கதாபாத்திரம் என அனைத்திலும் சிறப்பாக காட்டியுள்ளார் பாலா. ஒவ்வொரு கதாபாத்திரம் காட்டும் போது பின்னணி இசை சிறப்பாகவே அமைக்கப்பட்டுள்ளது.
ஆதித்ய வர்மா திரைப்படத்தோடு ஒப்பிடுகையில் வர்மா சிறப்பாகவே வந்துள்ளது. அறிமுக நாயகர் துருவ் விக்ரமிற்கு இவ்வளதுதான் அழகாக இருக்கும் என மாஸ் காண்பித்துள்ளார். அர்ஜூன் ரெட்டியில் நடித்துள்ள விஜய் தேவர்கொன்டா நல்ல உயரம் ஈடுதாடான உடல் கொண்டவர் துருவ் விக்ரம் உயரம் குறைவாக மெலிந்த தோற்றம் உள்ளவர். இதை புரிந்த பாலா அழகாக துருவ் விக்ரமிற்கு மாஸ் காட்டியுள்ளார்.
சேது படத்தில் விக்ரம் போல் வர்மா படத்தில் துருவ் விக்ரம் சார்ட் டெம்பராக கதாபாத்திரம் இணையாக உள்ளது. அதேபோல் வர்மா படத்தில் கதாநாயகியை காட்டும் போது பின்புறத்தில் மங்கள இசை ஒலித்து அபிதகுஜலாம்பாளை நியாபகப்படுத்துகிறார். சேதுவில் விக்ரம் காதல் விரக்தி ஒருபுறம் பின்புற தலையில் தாக்கப்பட்டு பைத்தியமாகி காதல் தோல்வியில் படம் முடிகிறது. வர்மாவில் காதல் தோல்வி அடைந்த துருவ், மதுகுடித்து தன்னை சுயநினைவை இழந்து பித்து படித்தது போல் சுத்துகிறார். சேதுவில் மொட்டைத் தலை, வர்மாவில் அதிக தாடி முடி என ஒப்பிட்டு இணையதள வாசிகள் கருத்து தெரிவிக்கின்றனர். இருப்பினும் சேதுவுக்கு ஈடாக வர்மாவை ஒப்பிட முடியாது.
அர்ஜூன் ரெட்டி கதாபாத்திரம் அனைவர் மனதிலும் பதிந்துவிட்டது. வர்மா கதாபாத்திரம் அனைவர் மனதிலும் பதியவேண்டும் என்றால் பாலாவின் முயற்சி முறையானது. பாலாவின் ரசிகர்களுக்கு வர்மா விருந்தாகவே இருக்கும்.