நடிகர் விஜய்குமார் மஞ்சுலா தம்பதியினருக்கு பிறந்த முதல் குழந்தைதான் வனிதா. நடிகர் விஜய்யுடன் சந்திரலேகா எனும் படத்தில் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் தெலுங்கு மலையாலம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். இருப்பினும் முதல் படத்திற்கு பின்னர் திரைத்துறையில் அவர் நடித்த படங்களில் பின்னடைவையே சந்தித்தார்.
அதன் பின் தனது 19 ஆவது வயதில் ஆகாஷ் என்பவரை மணந்த வனிதா நடிப்பதை முழவதுமாக நிறுத்தினார். இவர்களுக்கு ஷரீஹரி ஜோவிதா என்று இரண்டு குழந்தைகள் பிறந்தது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 2007 ஆண்டு ஆகாஷை விவாகரத்து செய்தார். அதன் பின்னர் அதே ஆண்டு ஆனந்த ஜெயராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டு அவரையும் விவாகரத்து செய்தார். இவர்களுக்கு ஜோவிதா என்ற பெண் குழந்தையும் ஒன்றும் இருந்தது.
2010 ஆம் ஆண்டு மீண்டும் திரையுலகிற்குள் காலடி எடுத்து வைத்து சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அதன்பின்னர் எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் என்ற படத்தை தனது காதலன் ராபார்ட் என்பவரை கதாநாயகனாக்கி தயாரித்தார். அந்த படத்தில் ஒரு தயாரிப்பாளாராக தோல்வியை சந்தித்தார்.
பெற்றோரிடம் இருந்து பிரிந்து தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்த வனிதா தற்போது மூன்றாம் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு அவரது பெண் குழந்தைகளே மணப்பெண் தோழிகளாக இருந்து அம்மாவை மகிழ்வித்தனர். குழந்தைகளின் விருப்பத்துடன் விஷ்வல் எஃப்க்ட்ஸ் எடிட்டர் பீட்டர் பால் என்பவரை மணந்து கொண்டார்.
கொரோனா சூழல் காரணமாக வீட்டிலேயே எளிமையான முறையில் கிறிஸ்துவ முறைப்படி அவர்களது திருமணம் நடைபெற்றது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். இதற்கிடையே வனிதாவுடைய வாழ்வில் திருப்புமுனையாக இருந்த இரண்டு நிகழ்ச்சிகள் பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி. குக் வித் கோமாளி மூலம், தான் சிறந்த குக் என்பதை நிரூபித்து அசத்தினார்.
இந்நிலையில் வனிதாவின் இந்த மூன்றாவது திருமணம் குறித்து நெட்டிசன்கள் வலைதளத்தில் விமர்சணங்களை முன்வைத்து வருகின்றனர். தனிநபரின் வாழக்கையை விமர்சிப்பது என்பது யார் யார்மீதும் முன்வைப்பது என்பது தவறானது ஒன்று. கலைக் குறித்த விமர்சனங்கள் என்பது ஏற்கக் கூடியது என்றாலும் ஒருவரின் தனிநபர் வாழ்க்கை குறித்த தவறான விமர்சனங்கள் மற்றும் மீம்கள் என்பது அதை செய்பவர்களின் தரத்தை தவறுதலாக சித்தரிக்கும் விதமாகவே உள்ளது.