விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தொகுப்பாளரும் நடிகருமான விக்னேஷ் கார்த்திக் குறும்படம் ஒன்றை இயக்கினார். அதில் அவரும் பிரபல தொகுப்பாளினியான ரம்யாவும் இணைந்து நடித்திருப்பர். இந்த குறும்படம் விஜய் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அவரின் நடிப்பு மற்றும் செயல்களை கேலி செய்து வருபவர்களுக்கான குறும்படமாக அது இருந்தது. இந்த குறும்படத்தில் விக்னேஷ் சிவன் விஜய் எல்லாம் ஒரு நடிகரா என்று ஆவேசமாகப் பேசியிருப்பார். அவரின் பேச்சுக்கு ஏற்றவாறு ரம்யா தகுந்த பதிலடி கொடுப்பார்.இந்த படத்திற்கு ரசிகர்களிடையே வலைத்தளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் இதன் இரண்டாவது பாகம் குறித்து தொகுப்பாளர் ரம்யா தனது ட்விட்டர் வலைத்தளத்தில், இந்த குறும்படத்தின் பாகம் ஒன்றுக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி, அதுதான் எங்களை பாகம் 2 எடுப்பதற்கு ஊக்குவித்தது. பாகம் 2 டிஸர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதையும் பார்த்த பிறகு உங்களது ஆதரவையும் கருத்துகளையும் பகரி வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
நடிகர் விஜய்யின் தீவிர ரசிகையான ரம்யா அவரின் மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.