Home சினிமா கிசு கிசு இந்தியாவின் ஆன்மா கிராமங்கள் என சொன்னால் போதாது., செயலில் காட்டனும்: கமல்ஹாசன்!

இந்தியாவின் ஆன்மா கிராமங்கள் என சொன்னால் போதாது., செயலில் காட்டனும்: கமல்ஹாசன்!

இந்தியாவிலேயே கொரோனா தொற்றுக் கோரத்தாண்டவமாடி வருகிறது. இதில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டள்ள மாநிலமாக சென்னை திகழ்கிறது. இருப்பினும் சென்னையில் கொரோனா பாதிப்பு சமீபத்திய நாட்களாக குறைந்துக் கொண்டே வருகிறது. சென்னையில் தினமும் 2,000-த்துக்கும் அதிகமாக தொற்று பாதிப்பு ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது அது 1,200 என்ற எண்ணிக்கையில் உள்ளது.

இருப்பினும் தமிழகத்தில் மதுரையில் கடந்த சில நாட்களில் கொரோனா பாதிப்பு ஐந்து மடங்கு வரை அதிகரித்துள்ளது.
மதுரையில் கடந்த ஜூன் 23 ஆம் தேதி முதல் ஜூலை 9 ஆம் தேதி வரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 மடங்கு அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தக் காலக்கட்டத்தில், சென்னையை சுற்றி இருக்கும் பகுதிகளான திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளன. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் இதுகுறித்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.

கொரோனா தொற்றின் தாக்கம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலேயே அதிகம் இருந்தது என்ற நிலை படிப்படியாக மாறி இருப்பதும் கடந்த 10 நாட்களில் பரவலான ஆய்வுகள் ஆரம்பித்ததும் உண்மை நிலை வெளிவருவதை உணர்த்துகிறது. நகரங்களில் பரவலான ஆய்வுகள் மூலம் நோய்த்தொற்று இருப்பதை ஆராயும் அரசு, கிராமப்புறங்களின் மீதும் அதீத கவனம் செலுத்த வேண்டும்.

முக்கியமாக நோய்த்தொற்று கண்டறிதல், அதற்கான சிகிச்சைகள், அது குறித்த விழிப்புணர்வு, தடுப்பு நடவடிக்கைகள் கிராமங்களில் அதிகப்படுத்த வேண்டிய அவசியம் வந்திருப்பதற்கு, கிராமங்களை அரசு இத்தனை நாள் கண்டுகொள்ளாமல் விட்டதே காரணம் என்பதை காட்டுகிறது.

இதுகுறித்து தெளிவாக விவரிவித்த கமல் ஹாசன், தமிழகத்தின் பல கிராமங்களில் ஆரம்ப சுகாதார மையங்கள் முறையான கட்டமைப்பு, போதிய உபகரணங்கள், மருத்துவ ஊழியர்களோ இன்றிதான் செயல்படுகின்றன எனவும் நவீன வசதிகள் கொண்ட நகரங்களே கொரோனா தடுப்பில் தள்ளாடும் போது கிராமப்புறங்கள் நிலை என்னவாகும் என அரசு நினைவுகூற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கிராமங்களில் இந்த கொரோனா தொற்று வருமுன் தடுக்கும் நடவடிக்கையை அரசு தீவிரமாக எடுக்க வேண்டும். வந்தபின் கட்டுப்படுத்துவது மிகவும் சவாலான விஷயம் என்று உணர்ந்து செயல்படவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவின் ஆன்மாவாக விளங்கும் கிராமங்கள் என பாடப்புத்தகத்தில் மட்டும் எடுத்துரைக்காமல், செயலில் காண்பித்து கிராமங்களில் இந்த தொற்று பரவலில் இருக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இது நமது கடமை எனவும் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

குலை நடுங்குகிறது: வெங்கட்பிரபுவின் “லைவ் டெலிகாஸ்ட்” எப்படி இருக்கு?

வெங்கட்பிரபு இயக்குனராக அறிமுகமாக நினைத்ததும் அவரது முதல் கதை லைவ் டெலிகாஸ்ட் கதைதானாம். இந்த சீரிஸ் ராகவா லாரன்ஸ் நடித்த காஞ்சனா-2-வின் தழுவலாக இருக்கிறது. லைவ் டெலிகாஸ்ட்டில் பேய்யை நேரடியாக மக்களுக்கு காட்ட...

கொரோனா தடுப்பூசி போடும் போதும் ஒரு அரசியல்: மோடி உடனிருந்த நாலு பேர்?

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள, கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், இந்தியாவில், சீரம்...

சர்கார் வியூகம் அமைக்கும் கமல்ஹாசன்: வேறலெவலில் இருக்கப்போகும் தமிழக சட்டப்பேரவை தேர்தல்!

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்படத் தொடங்கியுள்ளன. ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் ஐபேக் பிரசாந்த் கிஷோர் ஆலோசனையில் திமுக செயல்பட்டு வருகிறது. ஆட்சியை தக்கவைக்கும் நோக்கில்...

அன்றே தொடங்கிய பனிப்போர்: ஊசலாடும் புதுச்சேரி காங்கிரஸ் அரசு!

புதுச்சேரியில் அடுத்தடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து வருவதால், முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி தலைமையிலான அட்சி கடந்த 2016ம் ஆண்டில் இருந்து நடைபெற்று...

Related News

இவரை CSK ஏலம் எடுத்ததும் அரங்கமே கைதட்டல் குவிந்தது: அட அர்ஜுன் டெண்டுல்கரும் லிஸ்ட்ல இருக்காரு!

ஐபிஎல் 2021-க்கான ஏலம் விறுவிறுப்பாக சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் டெஸ்ட் போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் புஜாரா ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்கு ஆர்வம் காட்டினார். ஆனால் அவரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை....

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here