கொரோனா நோய்த் தொற்றால் ஊடகத் துறை பெரும் இழப்பைச் சந்தித்திருக்கிறது. சீரியல் மற்றும் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில் பழைய நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் சேனல்களில் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இதில் மஹாபாரதம், ராமாயணம் உள்ளிட்ட இதிகாசங்களும் மீண்டு ஒளிபரப்பு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்திய ஒளிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சல் வாரம் தோறும் சேனல் ரேட்டிங்களை வெளியிடும். அதன்படி இந்த வாரத்திற்கான ரேட்டிங்கை வெளியிட்டுள்ளது.
இதில் 8 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களைக் கொண்ட சன் டிவி முதலிடத்தைப் பிடித்துள்ளது. 1993 ஆம் ஆண்டு சன் குழுமத்தால் நிறுவப்பட்ட முதல் தொலைக்காட்சி சன் டிவி. இது தமிழில் முன்னொடி தொலைக்காட்சிகளில் ஒன்று. அன்று முதலே தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து வந்தது. அதிக பார்வையாளர்களைக் கொண்டு சிறந்த தொலைக்காட்சியாக விளங்கி வந்தது. தற்போதைய கொரோனா சூழலிலும், அதிக பார்வையாளர்களை ஈர்ப்பதில் கவனம் செலுத்தி முதலிடத்தைப் பிடித்து வருகிறது.
இதற்கு அடுத்த படியாக விஜய் தொலைக்காட்சி இருந்த வந்த நிலையில் தற்போது அந்த இடத்தை ஜீ தமிழ் கைப்பற்றியுள்ளது. 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொலைக்காட்சி அண்மை காலமாக பல்வேறு புதிய நிகழ்ச்சிகளை தந்து விஜய் டிவிக்கு இணையாக செயல்பட்டு வந்தது. இதனால் அவர்களது பார்வையாளர்களும் கணிசமாக உயர்ந்தது. இந்த வார ரேட்டிங்கில் 3 லட்சத்து 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களைக் கொண்டு இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
இந்த வாரம் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பது விஜய் தொலைக்காட்சி. 1994 ஆம் ஆண்டு முதல் தொடங்கி நிகழிச்சிகள் இதில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. பாட்டு, நடனம், நகைச்சுவை உள்ளிட்ட அனைத்து வகையான நிகழ்ச்சிகளையும் ஸெட் போட்டு புதிய முறையில் காட்சிப்படுத்தி பார்வையாளர்களை வியப்படையச் செய்த தொலைக்காட்சிகளில் முதன்மை இடத்தை இதற்கு வழங்கலாம். இருப்பினும் இந்த வார ரேட்டிங்கில் 3 லட்சத்து 2 ஆயிரத்து 111 பார்வையாளர்களைக் கொண்டு மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்து கே டிவி 29 ஆயிரம் பார்வையாளர்களைக் கொண்டு 4 ஆவது இடத்தையும், விஜய் சூப்பர் 16 ஆயிரம் பார்வையாளர்களைக் கொண்டு 5 ஆவது இடத்தையும் பிடித்திருக்கிறது. மேலும் நிகழ்ச்சி பொறுத்தவரை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளே முதல் 5 இடத்தில் அதிகம் பார்க்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது.
இந்தியாவில் டிவி பார்ப்பவர்களின் எண்ணிக்கை ஏப்ரல் மாதத்தில் 40 சதவிகிதம் உயர்ந்து காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.