உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்த கரோனா வைரஸ் பெருந்தொற்று இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. நாட்டிலும் கரோனா பரவல் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. இதனால் நாடு முழுவதும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது.

இப்படி இருக்கும் இந்த நேரத்தில் சத்தமில்லாமல் பல வேலைகள் இணையத்தில் நிகழ்ந்துள்ளன. அப்படி என்னவா? 2022ஆம் ஆண்டு கூகுளில் அதிகமாக அன்வெஷி ஜெயின் என்ற பாலிவுட் நடிகை அதிகமாக தேடப்பட்டுள்ளார்.
யார் இந்த அன்வெஷி ஜெயின்…!
2020 ஆம் ஆண்டின் மிகவும் கூகிளில் அதிகமாக தேடப்பட்ட பாலிவுட் நடிகை அன்வேஷி ஜெயின், மத்தியப் பிரதேசத்தில் கச்சிராகோவில் ஜெயின் குடும்பத்தில் பிறந்தவர். எலக்ட்ரானிக் என்ஜினியரிங் படித்த இவர், எம்பிஏ பாதியிலேயே நிறுத்திவிட்டு, மும்பை வந்தார்.
பின்னர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் ஆர்வம் காட்டிய அவர், இதுவரை ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இதில் மேம் இன் இந்தியா, ஐஎஃப்எ பெர்லின் ஆகியவை இவர் தொகுத்து வழங்கிய முக்கிய நிகழ்ச்சிகளாகும். பின்னர், இவர் நடிப்பு பக்கம் வந்தார். காந்தி பாட் என்ற சீரிஸில் இரண்டாம் பாகத்தில் நடித்தன் மூலம் பாலிவுட் பக்கம் பிரபலமானர். அதன்பின் ஒரு சில படங்களை நடித்துள்ளார்.

சரி, கூகுளில் அதிக தேட காரணம்…!
2022ஆம் ஆண்டு கூகுளில் அதிகமாக அன்வெஷி ஜெயின் என்ற பாலிவுட் நடிகை அதிகமாக தேடப்பட்டுள்ளார். அதற்கு காரணம் அவர் ஒரு யூடியூபர், மாடல், டேட் டிப்ஸ் கொடுப்பவர், பாடகர் என பல பன்முகங்களை கொண்டவர். அதனால் அவர், அவரது சமூக வலைத்தளத்தில், ஆப்பில் அவ்வப்போது வீடியோக்களை, புகைப்படங்களை பகிர்ந்துவந்தார். அதில் இம்ரஸ் ஆன இணைய வாசிகள் அன்வெஷி ஜெயினை தேடியுள்ளனர்.
இதுதான் சங்கதி…!
Pic Courtesy: Anveshi25