இப்போது உள்ள 2k கிட்ஸ்களுக்குக் கூட திருமணமாகி கையில் குழந்தையே உள்ளது. ஆனால் 90ஸ் கிட்ஸ்கள் அதுவும் ஆண்களின் நிலைதான் பரிதாபமாக உள்ளது.
இதயம் படத்தில் கையில் ரோஜாப்பூவுடன் காத்திருக்கிறோம் முரளியைபோலத் தான் பெரும்பாலான 90ஸ் கிடஸ்களும் தங்களது திருமணத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். வேலைவாய்ப்பு, குடும்ப பொறுப்பு, தலைமூடி உதிர்வது உள்ளிட்ட பிரச்னைகள் மத்தியில் திருமண வரன்கள் அமையால் இருக்கும் பிரச்னை தான் தலைதூக்கி ஆடுகிறது.
90ஸ் கிட்ஸ்களான உங்களுக்கு திருமண வரன்கள் குவிய வேண்டுமா அப்போ இந்த செய்தி உங்களுக்கானதுதான்.
குருபார்வை பட்டால் கோடி புண்ணியம் கிடைக்கும். அதுவும் குருவின் திருவருளால் திருமணம் கைகூடும், காரியத்தடை நீங்கி இருண்ட வாழ்வில் ஒளி கிடைக்கும் என்பது ஜோதிடர்களின் வாக்கு.
அந்த வகையில் ஆலங்குடியில் உள்ள ஏலவார்குழலி அம்மை உடனுறை ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் குரு பரிகாரத் தலமாக விளங்குகிறது.
இங்கு தென்திசை நோக்கி அமர்ந்தருளும் தட்சிணாமூர்த்தி தான், சிறப்பு மூர்த்தியாக போற்றப்படுகிறார். இவரை வணங்கினால் சகல நன்மைகளும் கைகூடும். இக்கோயில் தினசரி காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையும் திறந்திருக்கும்.
தற்போது கரோனா ஊரடங்கால் வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டுள்ளது. எனவே ஊரடங்கு தளர்வுகள் நீக்கப்பட்டு வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டால், 90ஸ் கிட்ஸ்கள் இந்த கோயிலுக்கு சென்று வழிபடுங்கள் உங்களுக்கு திருமண வரன்கள் குவியும்.