Home லைப்ஸ்டைல் ஜோதிடம் & ஆன்மீகம் சிங்கார தோரணையாக அமர்ந்திருக்கும் விநாயகர்...!

சிங்கார தோரணையாக அமர்ந்திருக்கும் விநாயகர்…!

சத்தீஸ்கர் மாநிலம் தந்தேவாடா மாவட்டத்தில் உள்ள தோலக்கு மலையின் சிகரத்தில் இரண்டு ஆயிரத்து 500 அடி உயரத்தில் விநாயகர் சிலையொன்று அமைந்துள்ளது.

இக்கோயிலில் விநாயகர் நான்கு கரங்களுடன் காட்சியளிக்கிறார். மேல்புறத்தில் உள்ள வலக்கையில் கோடரியையும், இடக்கையில் உடைந்த தந்தமும் வைத்திருக்கிறார்.

அபய முத்திரையுடன் காணப்படும் கீழேயுள்ள வலக்கையில் ருத்ராட்ச மாலையையும், இடக்கையில் கொழுக்கட்டையுடனும் காணப்படுகிறார்.

முன்னொரு காலத்தில் பரசு ராமருடன் ஏற்பட்ட போரில் விநாயகரின் தந்தம் உடைபட்டதாக புராணங்கள் கூறுகின்றன. ஆகவே, இவரை மக்கள், “ஏகாதந்தா” என அழைக்கின்றனர். அந்தக் கிராமம் பரஸ்பல் என்றே அழைக்கப்படுகிறது. இது பரசுராமரின் கோடரியை குறிக்கும் பர்ஸா என்ற வார்த்தையிலிருந்து மருவி வந்ததாகும்.

இங்கிருக்கும் விநாயகரின் சிலையை சிந்தாக் நாகவன்ஷி மன்னர்கள் 11ஆம் நூற்றாண்டில் நிறுவியதாக வரலாறுகள் கூறுகின்றன.

அதன்பின்னர் பஸ்தார் பழங்குடியின பெண் ஒருவர் இச்சிலையை வழிபட்டுவந்துள்ளார். அவருக்கு பின்னர் போகா பழங்குடியினர் தொன்றுதொட்டு இச்சிலையில் வழிபாடு நடத்துகின்றனர்.

மேலும் இங்கு ஒவ்வொரு ஆண்டும் கோடைக்காலமாக மே மாதத்தில் மூன்று நாள்கள் திருவிழா நடத்தப்படும். அப்போது, விநாயகர், பரசுராமர் மற்றும் உள்ளூர் தெய்வங்களின் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்படும்.

இங்குள்ள விநாயகர் கோயிலின் மீது எவ்வித குவிமாடமும் கட்டப்படவில்லை. சிகரத்தின் மேல் நிறுவப்பட்டுள்ள இந்தச் சிலையை வழிபாடு நடத்துவதும் அவ்வளவு எளிதல்ல.

பாதை இல்லாத மலைகள், பள்ளத்தாக்குகளை கடந்து செல்ல வேண்டும். மக்கள் இங்கு அரிதாக வருவதற்கு இதுவும் காரணம்.

இருப்பினும் இங்குள்ள மக்கள் விநாயகரை தொடர்ந்து வழிபட்டுவருகின்றனர். இங்கு பாதை மற்றும் இதர வசதிகளை ஏற்படுத்தும்போது உள்நாடு, வெளிநாட்டிலிருந்து பக்தர்கள், சுற்றுலாப் பயணிகளை பெருமளவு ஈர்க்க முடியும். இதில் மாநில அரசும் சுற்றுலாத்துறையும் கவனம் செலுத்த வேண்டும்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

குலை நடுங்குகிறது: வெங்கட்பிரபுவின் “லைவ் டெலிகாஸ்ட்” எப்படி இருக்கு?

வெங்கட்பிரபு இயக்குனராக அறிமுகமாக நினைத்ததும் அவரது முதல் கதை லைவ் டெலிகாஸ்ட் கதைதானாம். இந்த சீரிஸ் ராகவா லாரன்ஸ் நடித்த காஞ்சனா-2-வின் தழுவலாக இருக்கிறது. லைவ் டெலிகாஸ்ட்டில் பேய்யை நேரடியாக மக்களுக்கு காட்ட...

கொரோனா தடுப்பூசி போடும் போதும் ஒரு அரசியல்: மோடி உடனிருந்த நாலு பேர்?

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள, கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், இந்தியாவில், சீரம்...

சர்கார் வியூகம் அமைக்கும் கமல்ஹாசன்: வேறலெவலில் இருக்கப்போகும் தமிழக சட்டப்பேரவை தேர்தல்!

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்படத் தொடங்கியுள்ளன. ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் ஐபேக் பிரசாந்த் கிஷோர் ஆலோசனையில் திமுக செயல்பட்டு வருகிறது. ஆட்சியை தக்கவைக்கும் நோக்கில்...

அன்றே தொடங்கிய பனிப்போர்: ஊசலாடும் புதுச்சேரி காங்கிரஸ் அரசு!

புதுச்சேரியில் அடுத்தடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து வருவதால், முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி தலைமையிலான அட்சி கடந்த 2016ம் ஆண்டில் இருந்து நடைபெற்று...

Related News

இவரை CSK ஏலம் எடுத்ததும் அரங்கமே கைதட்டல் குவிந்தது: அட அர்ஜுன் டெண்டுல்கரும் லிஸ்ட்ல இருக்காரு!

ஐபிஎல் 2021-க்கான ஏலம் விறுவிறுப்பாக சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் டெஸ்ட் போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் புஜாரா ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்கு ஆர்வம் காட்டினார். ஆனால் அவரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை....

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here