இந்துக்களின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்றான நவராத்திரி கடந்த 17ஆம் தேதி தொடங்கியது. துர்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியர்களை கொலு வைத்து வழிபடும் சிறப்பு நிகழ்வாக நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் முதல் 3 நாள்களில் துர்கை அம்மனையும், அடுத்த 3 நாள்களில் லட்சுமி தேவியையும், இறுதி 3 நாள்களில் சரஸ்வதி தேவியையும் வழிபடுவார்கள்.
விழாவின் 9ஆவது நாளான வரும் 25ஆம் தேதி சரஸ்வதி பூஜையும், பத்தாம் நாளான அக்டோம்பர் 26ஆம் தேதி ஆயுத பூஜையும் மிக விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.
ஒன்பது நாள்கள் கொண்டாடப்படும் நவராத்திரி விழாவில் வீடுகளிலும், கோயில்களிலும் கொலு வைத்து ஆட்டம் பாட்டத்துடன் மக்கள் வழிபடுவர். இந்தக் கொலுவில் ஆறுபடை வீடு, தசாவதாரம், சீதா ராமர் திருக்கல்யாணம், கண்ணனின் லீலை என பல கடவுள் உருவங்கள் பொரித்த பொம்மைகள் இடம் பெறும்.
கரோனா பரவலுக்கு மத்தியில் நவராத்திரி வந்தாலும் கொண்டாடத்திற்கு பஞ்சமின்றி களைகட்டியுள்ளது என்றே சொல்லலாம்.
ஒன்பது நாளும் அம்மனுக்கு என்ன படைக்க வேண்டும்:
1.முதல் நாள்: அம்மனை மகேஸ்வரியாக அலங்கரித்து, மல்லிகை வில்வம் பூவால் ஜோடிக்க வேண்டும். பூஜையில் வெண் பொங்கல், கார மணி சுண்டல் வைத்து படைக்க வேண்டும்.
2.இரண்டாம் நாள்: கருமாரியாய் அம்மனானவலை அலங்கரித்து, துளசி மாலை அணிவித்து, மாம்பழம், புளியோதரை, பூட்டு படைக்க வேண்டும்.
3.மூன்றாம் நாள்: வராகி அம்மனாக வடிவமைத்து, செம்பருத்தி, சமபங்கி சூட வேண்டும். பின்னர் சர்க்கரை பொங்கல், எள்ளுப் பொடி, பலாப்பழம் படைத்து வழிப்பட வேண்டும்.
4. நான்காம் நாள்: மகாலெட்சுமி அம்மனாக அலங்கரித்து, சாது மல்லி சூடி, தயிர் சாதம் பட்டணி சுட்டல் படைத்து வழிபட வேண்டும்.
5.ஐந்தாம் நாள்: வைஷ்ணவியாய் அம்மனானவளை அலங்கரித்து, செண்பக பூவைச் சூடி, பொங்கல் பாயசம், மொச்ச பயிற்றை படைக்க வேண்டும்.
6.ஆறாம் நாள்: இந்திராணியாக அம்மனை அலங்கரித்து, குங்குமம் சூடி, தேங்காய் சாதம், மாதுளை பழம், சுண்டல் படைக்க வேண்டும்.
7.ஏழாம் நாள்: சரஸ்வதி தேவியானவளுக்கு தாழம்பூ, தும்பைப் பூ சூடி, எலுமிச்சை சாதம், இனிப்பு சுண்டல் படைத்து வழிபட வேண்டும்.
8.எட்டாம் நாள்: நரசிம்ஹியாக அம்மனை அலங்கரித்து, மருதாணி, சம்பங்கி சூடி, பால் சாதம், அப்பம் படைக்க வேண்டும்.
9.ஒன்பதாம் நாள்: சாமுண்டீஸ்வரிக்கு தாமரை, மரிக்கொழுந்து சூடி, வெள்ளை சாதம் , சுண்டல் படைத்து வழிபட வேண்டும்.
10. பத்தாம் நாள்: மகா துர்கையான அம்மனுக்கு, செவ்வரளி சூடி, சக்கரை பொங்கல், தயிர் சாதம், புளியோதரை படைத்து வழிபட வேண்டும்.