முருகனுக்கு முக்கிய விரத நாளாக பார்க்கப்படும் சஷ்டி விரதம் தற்போது தொடங்கியுள்ளது. இதனால், சஷ்டி விரதம் இருப்பதற்கான சிறப்பு, பலன், எப்படி இருக்கலாம் என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
சஷ்டி சிறப்பு
குழந்தை வரம் வேண்டி முருகனை நினைத்து விரதமிருக்க அவரே குழந்தையாக பிறப்பார் என்பது ஐதீகம்.
கந்த சஷ்டி திருநாள்:
ஒவ்வொரு மாதமும் வளர் பிறை தேய்பிறைகளில் சஷ்டி திதி வருவது வழக்கம். அப்படி கார்த்திகை மாதத்தி வரும் வளர்பிறை சஷ்டிக்கு மகா சஷ்டி என அழைக்கப்படுகிறது. இந்த தினத்தில் திருச்செந்தூர் கோயிலில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் விரதமிருந்து வழிபடுவது வழக்கம்.
சஷ்டி விரதம் எப்போது?
கார்த்திகை மாதம் வளர்ப்பிறையில் வரக்கூடிய சஷ்டி மகா சஷ்டி என அழைக்கப்படுகிறது. அந்த நாளை சேர்த்து மொத்தம் 6 நாட்கள் விரதம் இருப்பதும் சூரசம்ஹாரப் பெருவிழாவுடன் இந்த விரதம் நிறைவடையும்.
இந்த சஷ்டி விரதம் சிறப்பாக நடக்கும் திருச்செந்தூர் கோயில் முருகனின் ஆறுபடை வீடுகளில் 2வது படை வீடாகும்
குழந்தை வரத்திற்கான சஷ்டி விரதம் :
குழந்தை வரம் பெற விரும்புபவர்கள் சஷ்டி தினங்களில் விரதமிருக்கலாம். ஆனால் கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய வளர்பிற் மகா சஷ்டியில் 6 நாள் விரதம் கடைப்பிடிப்பது மிக விசேஷமானது. அப்போது குழந்தை வரம் வேண்டும் தம்பதியர் இருவரும் சேர்ந்து விரதம் இருப்பது நல்லது. கோயிலிலோ அல்லது வீட்டிலிருந்து கூட விரதம் இருக்கலாம்.
எங்கு விரதம் இருக்கலாம்?
வீட்டில் கூட சஷ்டி விரதம் இருக்கலாம் அல்லது முருகனின் ஆறுபடை வீடு கோயிலில் சென்று இருக்கலாம்.
விரதத்தின் போது செய்ய வேண்டியது:
பக்தர்கள் விரதத்தின் போது முருகனின் மந்திரங்களை பாராயணம் செய்தல், முருகனின் திருவிளையாடல் கதைகளைப் படிப்பது நல்லது. கந்த சஷ்டி கவசம் படித்தல், திருப்புகழ் உள்ளிட்டவை படித்து முருகனின் அருளைப் பெறலாம்.