தமிழர்களின் திருமணச்சடங்கில், ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி, மூங்கில் போல் சுற்றம் முழுமையாய் சூழப் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க என்று புதுமணத்தம்பதியரை வாழ்த்தும் வழக்கம் உள்ளது. இந்த பதினாறு பேறுகளும் மக்கட் பேறல்ல. பதினாறு செல்வங்களையே நம் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.
அப்படி, அந்த காலத்திலும் சரி; இந்த காலத்திலும் சரி… மணமக்களை வாழ்த்தும் பெரியவர்கள் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க! என்று வாழ்த்துவது வழக்கம். அப்படி வாழ்த்தபெறும் அந்த 16 செல்வங்கள் எவை?
1.கலையாத கல்வி
2குறையாத வயது
3.ஓர் கபடு வராத நட்பு
4.குன்றாத வளமை
5.குன்றாத இளமை
6.கழு பிணி இலாத உடல்
7.சலியாத மனம்
8.அன்பு அகலாத மனைவி
9.தவறாத சந்தானம்
10.தாழாத கீர்த்தி
11.மாறாத வார்த்தை
12.தடைகள் வராத கொடை
13.தொலையாத நிதி
14. கோணாத கோல்
15.துன்பமில்லாத வாழ்வும்
16.துய்ய நின்பாதத்தில் அன்பு