சரியான தூக்கம் இல்லை என்றாலே பிரச்னை தான். தூக்கமின்மையால் மன அழுத்தம், நீரிழிவு, இதய நோய் கூட வர வாய்ப்புள்ளது. படுத்தவுடனே நிம்மதியாக தூங்க வேண்டும் என்றால் இச்செய்தி உங்களுக்கு தான்.
எட்டு எட்டா மனிஷன் வாழ்க்க பிரிச்சிக்கோ என பாட்ஷா படத்தில் வரும் பாடலை போல எட்டு மணி நேரம் வேலை, எட்டு மணி நேரம் தூக்கம். சொந்த வேலைகளுக்காக எட்டு மணி நேரம் என மனிதர்களின் வாழ்க்கை மூன்று எட்டு மணி நேரங்களாக பிரிக்கலாம்.
ஆனால் இந்த நவீன யுகத்தில் அதுவும் கரோனா லாக் டவுன், வொர்க் ஃப்ரம் ஹோம் ஆகியவற்றால் பெரும்பாலானவர்கள் நல்ல தூக்கத்தை இழந்து விட்டனர். கையில் எந்நேரமும் செல்போன், லேப்டாப் உடனே இருப்பதால் அவர்கள் தூக்கிமின்னை பிரச்னைக்கு ஆளாகின்றனர். நல்ஷ தூக்கம் இல்லை என்றாலே பிரச்னை தான்.
ஒருநாள் தூங்காமல் இருந்தாள் பிரச்னை இல்லை. ஆனால் அந்த பழக்கம் தொடர்ந்தால் நிச்சயம் மனதளவிலும் உடலளவிலும் பிரச்னை ஏற்படுத்தும்
தூக்கமின்மையால் ஏற்படும் விளைவுகள்
நல்ல தூக்கம் இல்லை என்றால் நாம் வேலைக்கு செல்லும் போது விபத்துகள் நேரிட வாய்ப்புள்ளது.
சிந்தனை மற்றும் கற்றலில் தூக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. தூக்கமின்மையால் கவனக்குறைவு, செறிவு, பகுத்தறிவு மற்றும் சிக்கல் தீர்க்கும் தன்மையை பாதிக்கிறது. மேலும் கற்றல் திறனையும் பாதிக்கும்
தூக்கிமின்மையால் உடல் எடை அதிகரிக்கும். நியாபக சக்தி மங்கும். கண்ணுக்கு கீழ் கருவளையம் வரும். தோள் சுருங்கும். சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு, மாரடைப்பு, மன அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் வரலாம்.
நல்ல தூக்கத்தை பெற
ஒரு வழக்கமான அட்டவணையைப் பின்பற்றுங்கள், ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் எழுந்து படுக்கைக்குச் செல்வதை கடைபிடியுங்கள்.
இரவு நேரங்களில் காஃபின் உட்கொள்வதை குறைத்துக் கொள்ளுங்கள்.
தேவைப்பட்டால் தியானம், யோகா பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
இரவு நேரங்களில் மிதமான சூட்டில் குளியுங்கள். அதேபோல இரவுகளில் லைட்டான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
சாப்பிட பிறகு நடைப்பயிற்சி செல்வதை கடைபிடியுங்கள். அவ்வாறு செய்வதால் உடல் சோர்வாகும் தூக்கமும் நன்கு வரும்.
இரவு நேரங்களில் புத்தகங்கள் அல்லது ரேடியோக்களில் மெலோடி பாடல்களை கேளுங்கள். இதமான பாடல்களை கேட்டால் தானாக தூக்கம் வந்துவிடும்.
கவலை, மன அழுத்தம், பதட்டங்கள் மற்றும் பிற குழப்பமான எண்ணங்களை யோசிப்பதை தவிர்க்கவும்.
தூங்கும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.
தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக செல்போன், லேப்டாப், டிவி பார்ப்பதை தவிர்க்கவும்.