குடும்பத்தில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளின் இழப்பு குழந்தைகளுக்கு வருத்தத்தை தூண்டுவது மட்டுமின்றி மனநல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
பொதுவாக வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் குடும்பத்தின் ஓர் உறுப்பினராகதான் இருந்து வருகிறது. வீட்டில் எத்தனை பேர் இருந்தாலும் இந்த செல்லப்பிராணிகள், குழந்தைகளிடம் மிகவும் அன்பாக பழகும். குழந்தைகளுக்கு ஏதாவது நேர்ந்தால் கூட செல்லப்பிராணிகளால் தாங்க முடியாது.
அதேபோல் தான் குழந்தைகளும் தாங்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகள் மீது அதீத அன்பை பொழிவார்கள். குழந்தைகள் – செல்லப்பிராணிகளுக்கு இடையே இருக்கும் உறவை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. அதை அனுபவித்தால் மட்டுமே புரியும். செல்லப்பிராணிகள் உயிரிழந்தால் அதனை குழந்தைகளால் சிறுவயதில் தாங்கிக்கவும் ஏற்றுக்கொள்ளவும் முடியாது.
இந்நிலையில் குடும்பத்தில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளின் இழப்பு குழந்தைகளுக்கு வருத்தத்தை தூண்டுவது மட்டுமின்றி மனநல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஐரோப்பிய குழந்தை மற்றும் இளம்பருவ உளவியல் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், செல்லப்பிராணிகளுடன் இளைஞர்களுக்கு இருக்கும் உணர்ச்சி ரீதியான இணைப்பு, உளவியல் துயரத்தை ஏற்படுத்தக்கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
செல்லப்பிராணியின் இறப்பு தான் குழந்தைகள் சந்திக்கும் முதல் பெரிய இழப்புகளில் ஒன்றாக இருக்கும். குடும்பத்தில் ஒரு உறுப்பினர் போன்று வளர்க்கப்படும் தால் அதன் இழப்பு குழந்தைகளைகளுக்கு அதிர்ச்சிகரமானதாக இருக்கலாம் என்கிறார் மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையைச் சேர்ந்த ஆய்வு ஆசிரியர் கேத்ரின் கிராஃபோர்ட் (எம்.ஜி.எச்)
செல்லப்பிராணிகளகன் இழப்பு குழந்தைகளின் மனநல பிரச்னை ஏற்படுத்துவதற்கான அறிகுறிகளுடன் தொடர்புடையது என்பதை நாங்கள் கண்டறிந்தோம். மேலும் பெற்றோர்களும் மருத்துவர்களும் அந்த அறிகுறிகளை அடையாளம் கண்டு அதனை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அவற்றினை சாதாரணமாக எடுத்துக் கொள்ள கூடாது என்றும் அவர் கூறினார்.
குழந்தைகள் செல்லப்பிராணிகளுடன் உருவாக்கும் பாசம், பாதுகாப்பு மற்றும் உறுதியளித்தல் ஆகியவற்றின் அடிப்படையில் பாதுகாப்பான மனித உறவுகளை ஒத்திருக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். குழந்தைகள் பெரும்பாலும் செல்லப்பிராணிகளை ஆறுதலுக்காகவும், அவர்களின் அச்சங்களுக்கும் உணர்ச்சிகரமான அனுபவங்களுக்கும் குரல் கொடுப்பதாகவும் முந்தைய ஆய்வுகளில் கண்டறியப்பட்டன.
செல்லப்பிராணிகளின் இழப்புகளால் குழந்தைகள் இத்தகைய பிரச்னைகளை சந்திக்க நேரிடுகிறார்கள். அதுவும் தங்களது முதல் ஏழு வயதில் செல்லப்பிராணிகளுடன் நேரத்தை செலவிட்ட 63 சதவித குழந்தைகள் தான் இத்தகைய பிரச்னைகளை சந்திக்கிறான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் பிரிஸ்டலில் உள்ள பெற்றோர் மற்றும் குழந்தைகளின் அவான் லாங்கிட்யூடினல் ஸ்டடியின் (ALSPAC) 6,260 குழந்தைகளின் மாதிரியை அடிப்படையாகக் கொண்டு இந்த பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது.இந்த மக்கள்தொகை அடிப்படையிலான மாதிரி தாய்மார்கள் மற்றும் குழந்தைகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளால் நிரம்பியுள்ளது. இது குழந்தையின் சிறு வயதிலிருந்தே எட்டு வயது வரை செல்லப்பிராணி உரிமை மற்றும் செல்லப்பிராணி இழப்பு ஆகியவற்றின் அனுபவத்தைக் கண்டறிய ஆராய்ச்சியாளர்களுக்கு உதவியது.
செல்லப்பிராணி இழப்பு தொடர்பான அனுபவங்களை நீண்ட காலத்திற்கு ஆராய்ந்த பின்னர் குழந்தைகளின் மன மற்றும் உணர்ச்சிகளை எங்களால் பகுப்பாய்வு செய்ய முடிந்தது என்றார் ஆராய்ச்சியாளர் எரின் டன்.
மேலும் பொருளாதாரத்தில் எத்தகைய சுகத்தை சேர்த்த குழந்தைகளாக இருந்தாலும் அல்லது அவர்கள் தங்களது சிறுவயதில் ஏற்கனவே கஷ்டங்களை அனுபவித்திருந்தாலும் ஒரு செல்லப்பிராணியின் இழப்பு குழந்தை பருவத்தில் மனநோயியல் அறிகுறிகளுக்கு இடையேயான தொடர்பு ஏற்பட்டுள்ளது என்பதை நாங்கள் இந்த ஆய்வில் கவனித்தோம் என்கிறார் எரின் டன்