81 வயதில் 15 புஷ் அப்ஸ் செய்து அசத்தும் பாட்டி…….இவரின் தாயா…..?
மிலிந்த் சோமன் பிரபல நடிகரும் மாடலும் ஆவார். இவர் தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம், அலெக்ஸ் பாண்டியின், ஹிந்தியில் பாஜிராவ் மஸ்தானி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக திரையுலகமே முடங்கி இருக்கிறது. இந்த சூழலில் அனைத்து பிரபலங்களும் பிறந்தநாள் முதல் திருமணம் வரை வீட்டிலேயே எளிதாக நடத்தி வருகின்றனர். அதே போல் மிலிந்த் சோமனும் தனது தாயின் 81 ஆவது பிறந்தநாளை தனது வீட்டிலேயே மனைவியுடன் சிறப்பாகக் கொண்டாடியிருக்கிறார். அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் மிநிந்த் சோமனின் தாய் உஷா சோமன் புடவை அணிந்து கொண்டு 15 முறை புஷ் அப்ஸ் எடுத்து உள்ளார். இந்த வீடியோவிற்கு கீழ் மிலிந்த் சோமன், “பொது முடக்கத்தில் தனது 81 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். 15 புஷ் அப்ஸ் மற்றும் ஜேக்கரி வெண்ணிலா ஆல்மண்ட் கேக்குடன் பார்ட்டி. பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா. எப்பொழுதும் மகிழ்வுடன் இருக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார். இது பல்வேறு பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த வீடியோ வைரலாகி பல்வேறு வலைத்தளங்களிலும் பகிரப்பட்டது.
மேலும் அவரது மனைவி அன்கிதா சோமன், தன் கணவர் மாமியாருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில் தனது மாமியார் இந்த ஆண்டு பிறந்தநாளை சாம்பியாவில் கொண்டாட முடிவெடுத்திருந்தார். பங்கி ஜம்பிங் செய்து கொண்டு உற்சாகமாக பிறந்தநாளை களிக்கலாம் என்ற எண்ணத்தில் இருந்தார். ஆனால் இந்த கொரோனா நோய்த் தொற்று காரணத்தால் அவரின் பயணம் ரத்து செய்யப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோவிற்கு ‘அம்மாவைப் போல் மகன்’, ‘மகனைப் போல் அம்மா’ என்றும் ‘ஒரு சிறந்த முன்னாதாரனம்’ உள்ளிட்ட பல்வேறு கமென்டுகள் குவிந்து வருகின்றன.