கறை நல்லது என்ற சோப்பு விளம்பரத்தின் வாசகத்தை நாம் அனைவரும் அறிவோம். அந்த விளம்பர வாசகத்தை கப்புனு பிடிச்சிக்கிட்ட ஒரு ஜீன்ஸ் தயாரிப்பு நிறுவனம், அதற்காக ஒரு வித்தியாசமான ஸ்டைலில் ஜீன்ஸ் ஒன்றை வடிவமைத்துள்ளது.
செயற்கை கறையுடன் கூடிய ஜீன்ஸ் ரூ.88,000க்கு விற்பனை செய்யப்பட்டு வருவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இத்தாலியைச் சேர்ந்த ஃபேஷன் நிறுவனம் ஒன்று வித்தியாசமான ஜீன்ஸ் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால், இந்த உடைகளில் செயற்கையான கறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. பொதுவாகத் துணியில் கறை ஏற்பட்டுவிடுமோ என அச்சப்படுவோம். ஆனால் இவர்கள் புதுவிதமாகக் கறையுடனே புது துணியை விற்பனை செய்கிறார்கள். இதற்கு நல்ல மவுசு இருக்கும் எனக் கூறுகின்றனர்.
இதன் விலை உங்களுக்குச் சற்று அதிர்ச்சியைக் கூட ஏற்படுத்தலாம். செயற்கையான கறையுடன் கூடிய இந்த ஜீன்ஸ் சுமார் ரூ.88,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில் உங்களுக்கு கூடுதலாக ஏதாவது வசதி வேண்டுமென்றால், அதற்கு கூடுதல் கட்டணமும் செலுத்த வேண்டும். இன்னும் அதிக அளவில் கறைகள் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அதற்கு ரூ.1 லட்சம் வரை கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். எப்படி இருந்தாலும், இதனை வாங்கி அணிவதற்கு பலரும் தயாராக இருக்கின்றனர்.