நின்று நிதானமாக செல்ல முடியாமல் வேகமாக ஓட்டம் பிடிக்கும் இன்றைய அதிவேகமான போட்டி நிறைந்த உலகத்தில் மன அழுத்தம் என்பது பொதுவாக ஏற்படக்கூடிய பிரச்சனையாக உள்ளது.
சந்தோஷமும், மன நிம்மதியும் இருந்தால் தானே அழுத்தம் இல்லாமல் இருக்கலாம்.
நாம் உண்ணும் உணவுகளினாலும் கூட மன அழுத்தம் ஏற்படுகிறது. ஆம் ஆரோக்கியமற்ற ஜங்க் உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவைகளாலும் கூட அழுத்தங்கள் ஏற்படுகிறது.
அழுத்தம் என்பது பதற்றத்தில் இருந்து தொடங்கும். அது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து பெரிய உடல்நல பிரச்சனையாக மாறிவிடுகிறது.
சரி, இந்த மாதிரியான உணர்வுகளை விட்டு மிக வேகமாக வெளியே வந்து, நேர்மறையாக செயல்பட தொடங்க பல வழிகள் இருக்கவே செய்கிறது. அந்த பல வழிகளில் ஒன்று தான் அழுத்தத்தை போக்கும் உணவுகளை உண்ணுவது.
இது உங்கள் மனநிலையையும், உடலையும் சந்தோஷமாக்கும். கேட்க ஆச்சரியமாக தான் இருக்கும். ஆனால் இம்மாதிரியான மோசமான நேரங்களில் இவ்வகையான உணவுகளை உட்கொள்வது நன்மையை அளிக்கும்.
ஸ்ட்ராபெர்ரிகள்
ஸ்ட்ராபெர்ரியில் பொட்டாசியம் வளமையாக உள்ளது. இது நரம்பு தூண்டுதலை உருவாக்க உதவும். இதில் வைட்டமின் சி-யும் வளமையாக உள்ளது. இது உங்கள் மனநிலையை சிறப்பாக மேம்படுத்தும்.
வாழைப்பழம்
ஸ்ட்ராபெர்ரிகள் போலவே வாழைப்பழத்திலும் பொட்டாசியம் வளமையாக உள்ளது. இதில் ட்ரிப்டோஃபன் என்ற பொருளும் உள்ளது. இது சந்தோஷமான ஹார்மோனான செரோடொனின் உற்பத்தியை அதிகரிக்க செய்யும். இதுப்போக, வாழைப்பழத்தில் உள்ள இயற்கையான சர்க்கரை உங்கள் இரத்த ஓட்டத்தில் வெளியிடப்படும். இது உங்கள் ஆற்றலை அதிகரிக்க செய்யும்.
முட்டைகள்
முட்டையில் ஜின்க், வைட்டமின் பி, அயோடின், ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் மற்றும் புரதம் அடங்கியுள்ளது. முட்டையில் உள்ள இந்த பொருட்கள் அனைத்தும் பல்வேறு அளவுகளில் உள்ளது. இது உங்கள் மூளை நடவடிக்கைக்கு நல்லதாகும். மேலும் ஆற்றலை ஊக்குவிக்கவும் செய்யவும்.
தேன்
உடல்ரீதியான ஆரோக்கிய பிரச்சனைகள் என வரும் போது தேன் பல விதத்தில் கை கொடுப்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும். தேனில் கேம்ப்ஃபெரோல் மற்றும் குவெர்செட்டின் போன்ற பொருட்கள் உள்ளது. இது மூளைக்கு ஏற்பட்டுள்ள அழற்சியை குறைக்கும். இது மன அழுத்தம் ஏற்படுவதை தடித்து, மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக வைக்கவும் தேன் உதவும்.
தேங்காய்
தேங்காயில் மீடியம் செயின் ட்ரிக்லிசெரைட்ஸ் (MCT) உள்ளது. இது நல்ல மனநிலையை உண்டாக்கும் விசேஷ கொழுப்புகளாகும். மேலும் மனித மூளையின் பொதுவான ஆரோக்கியத்திற்கும் இது நல்லதாகும்.