Home லைப்ஸ்டைல் மருத்துவம் கர்ப்பிணிகள் செய்யவேண்டிய மூச்சு பயிற்சி என்னென்ன?

கர்ப்பிணிகள் செய்யவேண்டிய மூச்சு பயிற்சி என்னென்ன?

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சீரான அளவில் மூச்சு விடுவது முக்கியம். கர்ப்பிணிகளுக்கு மட்டுமில்லாமல் கருவில் வளரும் குழந்தைகளுக்கும் தேவையான அளவுக்கு ஆக்ஸிஜன் கிடைக்க வேண்டும்.

சரியான அளவில் சீராக ஆக்ஸிஜன் கிடைத்தால் தான் கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சி சீராகவும், ஆரோக்கியமாகவும் ( Health Tips Tamil ) இருக்கும். எனவே கர்ப்பிணிப் பெண்கள் மூச்சுப் பயிற்சியைத் தொடர்ந்து செய்து வர வேண்டும். அத்தகைய 4 எளிதான மூச்சுப் பயிற்சிகள் பற்றி இப்போது நாம் பார்க்கலாம்.

வயிற்றிலிருந்து…

‘பெல்லி ப்ரீத்திங்’ என்று அழைக்கப்படும் இந்த மூச்சுப் பயிற்சியைக் கர்ப்பிணிகள் தினமும் குறைந்தது 10 நிமிடங்களாவது செய்ய வேண்டும். கால்களை மடக்கி வசதியாக உட்கார்ந்து கொண்டு, தாடை, தோள்கள் மற்றும் இடுப்பை ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். பின் உங்கள் கையை வயிற்றில் வைத்துக் கொண்டு, மறு கையையும் அதன் மேல் வைத்துக் கொள்ளுங்கள்.

இதையடுத்து, அடி வயிற்றிலிருந்து மூச்சை இழுங்கள். அந்த நிலையில் வயிறு முழுவதும் மூச்சு பரவும் வகையில் 1, 2, 3… என்று 8 வரை எண்ணுங்கள். பின் மெதுவாக மூச்சை வெளியே விடுங்கள். இதே முறையை மீண்டும் மீண்டும் செய்யுங்கள்.

மார்பிலிருந்து…

பாதங்களை இணையாக வைத்துக் கொண்டு நேராக நிற்கவும். வாயை மூடிக் கொண்டு, மூச்சை நன்றாக இழுத்து 10 வரை எண்ணவும். அப்போது கைகளை மார்பில் வைத்துக் கொள்ளுங்கள் (அழுத்தக் கூடாது). நுரையீரல் விரிவடைவதை உங்களால் உணர முடியும். அப்புறம், ஓரிரு நொடிகள் மூச்சை அப்படியே பிடித்துக் கொண்டிருந்து விட்டு, மெதுவாக மூச்சை வெளியே விட்டு, 10 வரை எண்ணவும்.

இதேபோல் இந்தப் பயிற்சியை 10 முறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும். 7வது மாதத்திற்குப் பின் இந்தப் பயிற்சியைச் செய்வது சிரமமாக இருந்தாலும், முடிந்த வரை செய்து வாருங்கள்.

மூச்சை விழுங்கி…

மல்லாக்க கீழே படுத்துக் கொண்டு, வாயை நன்றாகத் திறந்து மூச்சை வேகமாக இழுத்து விழுங்க வேண்டும். இதைத் தொடர்ந்து செய்தால் நுரையீரல்களுக்கு நல்லது.

தினமும் ஒரு 5 நிமிடங்கள் இந்தப் பயிற்சியைச் செய்தால் நுரையீரல் ஆரோக்கியமாக இருக்கும். கருவில் உள்ள குழந்தைக்கும் ஆக்ஸிஜன் சீராகப் போகும்.

மாற்று மூச்சு விழுங்கும் பயிற்சி

இதை நின்று கொண்டே செய்யலாம்; அல்லது வசதியாக உட்கார்ந்து கொண்டும் செய்யலாம். உடம்பு முழுவதையும் நன்றாக ரிலாக்ஸ் செய்து கொண்டு, மூச்சை நன்றாக இழுத்து நிறுத்தவும்.

ஓரிரு நொடிகள் கழித்து, அதேபோல் உட்கொண்ட காற்றை மெதுவாக வெளியேற்றவும். பின் வாயைத் திறந்து, காற்றை இழுத்து விழுங்கி, 5 வரை எண்ணவும். பின் வாயை மூடிக் கொண்டு ஆழமாக மூச்சை இழுத்து விட வேண்டும். ஒரே நேரத்தில் 5 முறை இந்தப் பயிற்சியைச் செய்யலாம்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

‘ஈகோ’ என்று கமல் கூறியது இதுதானா? ரஜினியுடன் கூட்டணி சாத்தியமா?

ஈகோ பார்க்காமல் ரஜினியின் சேர்ந்து பணியாற்றுவேன் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்துக் கட்சிகளும் பரப்புரையில் ஈடுபடத் தொடங்கி விட்டன. அதன்படி,...

குடியரசு தின விழா: போரிஸ் ஜான்சன் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு!

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். நாட்டின் 72வது குடியரசு தின விழா, வரும் ஜனவரி மாதம்...

மக்கள் சேவை கட்சி., ஆட்டோ சின்னம்: ரஜினி கட்சியின் பெயர், சின்னம்?

தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பழைய கட்சியை, நடிகர் ரஜினிகாந்த் பயன்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. “ஜனவரியில் கட்சித் துவக்கம். டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு” என நடிகர் ரஜினிகாந்த் தனது...

ஜோ பைடன் வெற்றி– உறுதி செய்த பிரதிநிதிகள் குழு!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றதை பிரதிநிதிகள் குழு உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கடந்த நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடந்து முடிந்தது. தேர்தலில் ஜனநாயக கட்சி...

Related News

மீண்டும் ஊரடங்கு அறிவித்த நாடு: இந்த முறை ரொம்ப கடுமையாக இருக்கும்!

சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளையே ஒரு உலுக்கு உலுக்கியது என்றே கூறலாம். கொரோனா வைரஸ் எப்போது முடிவுக்கும் வரும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்ப்பு இருக்கிறது....

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here