இன்றைய காலத்தில் உணவு பழக்கமுறைகள் மாறியிருப்பதால் உடல் உபாதைகளும் மாறத் தொடங்கியுள்ளன. அன்றைய காலத்தில் 60 வயது பெரியவர் கூட நன்றாக வேலை செய்தவதை கேட்டிருப்போம். ஆனால் இன்றைய நவீன உலகில் அனைத்திற்கும் மிஷின் வைத்திருப்பதால் மனிதன் தன்னுடைய வேலையை செய்வதற்கு கூட இயந்திரத்தை தேடும் உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கோம். இதனால் இளம் வயதிலேயே மூட்டு வலி ஏற்படும் அபாயம் தோன்றுகிறது. இதனை போக்க எளிமையான வீட்டு வைத்திய முறைகளை இங்கு காண்போம்.
பச்சை பப்பாளியை சிறு துண்டுகளாக ஒரு 1 கப் அளவு நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். சின்ன வெங்காயம் 6 (சாம்பார் வெங்காயம்) – தோலுரித்து பொடியாக நறுக்கியது. பூண்டு – 4 தோலுரித்து (ரசத்துக்கு நைய்ப்பது போல், ஒன்றிரண்டாக நிச்சுக்கொள்ளுங்கள்.) மிளகு – 1 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன் இரண்டையும் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள். இறுதியாக கல் உப்பு – 2 சிட்டிகை. கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது.
அடுப்பில், ஒரு பாத்திரத்தை வைத்து, பெரிய டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி, நன்றாக கொதிக்க விடுங்கள். 200ml தண்ணீர் எடுத்துக் கொண்டால் போதும். அதில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பச்சைப் பப்பாளித் துண்டுகளை சேர்க்கவும்.
அடுத்ததாக தயார் செய்து வைத்திருக்கும் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சீரகப் பொடி, எல்லாவற்றையும் சேர்த்து, இறுதியாக உப்பையும் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வரை வேக வைத்தால் போதும். இந்த பப்பாளிக்காயானது முழுமையாக வெந்து விடக்கூடாது. கடித்து சாப்பிட்டால் நறுக்கென்று இருக்க வேண்டும். முழுமையாக வெந்து கொழகொழவென்று ஆக கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதியாக அடுப்பிலிருந்து இந்த சூப்பை தனியாக பவுலில் மாற்றி, அதில் கொத்தமல்லி தழையை தூவினால், மூட்டுவலியை சரிப்படுத்தும் பச்சை பப்பாளிக்காய் சூப் தயார். சர்க்கரை வியாதி உள்ளவர்களும் தாராளமாக இந்த சூப்பைக் குடிக்கலாம்.
7நாட்கள் தொடர்ந்து குடித்து வாருங்கள், மூட்டு வலியில் நல்ல முன்னேற்றம் கட்டாயம் தெரியும். அதன் பின்பு, 10 நாட்களுக்கு ஒருமுறை இந்த சூப்பை குடித்தால் மூட்டு வலி நிரந்தரமாக வராமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.