இயற்கையாகவே தயாரித்து பயன்படுத்தக் கூடியவற்றை தவிர்த்து மக்கள் கடைகளுக்கு சென்று வாங்குவதை தான் அதிகம் விரும்புகிறார்கள். அதிக விலையில் இருந்தாலும் பலர் அதனைக் கண்டுக் கொள்வதில்லை வாங்கி உபயோகப்படுத்துகிறார்கள். அதிலும் குறிப்பாக அழகு சாதனப் பொருட்களுக்கு தான் அதிக டிமேண்ட்.
இந்நிலையில் வீட்டிலேயே எளிதில் தயாரிக்கக் கூடிய ஹேர் ஜெல் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். மென்மையான பளபளப்பான கூந்தலை அடைய கற்றாழையே போதுமானது. இது கூந்தலுக்கு மட்டுமின்றி முகப்பொலிவிற்கும் சிறந்தது. மேலும் சர்க்கரை நோய், மலச்சிக்கல், மாதவிடாய் பிரச்னைகளுக்கும் கற்றாழை சிறந்த மருந்தாகும். இதற்கு முதலில் வீட்டில் ஒரு கற்றாழை செடி வளர்ப்பது அவசியம்
முதலில் இரண்டு கற்றாழை துண்டுகளை எடுத்துக் கொள்ளங்கள். இதன் உள்புரம் உள்ளதை சீவி எடுத்து நன்கு அரைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்னர் தலை முடியில் தடவி சிறிது நேரத்திற்கு பிறகு கழுவிட வேண்டும்.
இதனை இன்னொரு முறையிலும் பயன்படுத்தலாம், அரைத்த கற்றாழையை சிறிது தண்ணீருடன் சேர்த்து தலைக் குளித்த பின்னர் முடியில் தடவிக் கொள்ளலாம். இதனால் முடி பட்டுப்போன்று மென்மையாக காணப்படும்.
கடைகளில் வாங்கும் ஹேர் ஜெல்லிற்கு பதில் இதனை நீங்கள் பயன்படுத்துவது சிறந்தது.