நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும், உடல் எடை குறைப்புக்கும் தேன் அதிகம் பயன்படுகிறது.
கெரோனா நோய்த்தொற்று வந்த பிறகு, பலரும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது என்று தேடிக் கொண்டிருக்கிறார்கள். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி என்பது நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளிலும், நம்முடைய பழக்க வழக்கங்களைச் சார்ந்தும் இருக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் தான் பாக்டீரியா, வைரஸ், காய்ச்சல், இருமல் போன்றவற்றிலிருந்து நாம் நலம் பெற முடியும். எனவே, நல்ல ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில், தேன் சார்ந்த உணவு குறித்த விவரங்களை இங்குப் பார்க்கலாம். தேனில் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்களைக் கொல்லும் பண்புகள் உள்ளன. மேலும், எக்கச்சக்கமான ஊட்டச்த்துக்கள் காணப்படுகின்றன. எனவே, அன்றாட உணவு பழக்கவழக்கங்களில் தேன் சேர்த்துக் கொள்ளலாம்.
தேன் கலந்த மூலிகை டீ
மூலிகை டீயில் இனிப்பு சுவைக்காக தேன் சேர்க்கலாம். மூலிகை டீயில் மஞ்சள், இஞ்சி, மிளகு போன்றவையும் இருப்பதால், இது உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.
இஞ்சி – தேன் லெமன் டீ
இது 5 நிமிடத்தில் செய்யக்கூடிய ரெசிபி ஆகும். லெமன் டீயில், சர்க்கரைக்குப் பதிலாக தேன் சேர்த்து கொதிக்க வைத்தால் போதும். இந்த குளிர்காலத்தில் சூடாக இஞ்சி தேன் சேர்த்த லெமன் டீ குடித்தால் உற்சாகமாக இருக்கும்.
கிரானோலா ஸ்மூத்தி
ஆளிவிதைகள், வாழைப்பழம், தேன், இலவங்கப்பட்டை, ஆகியவற்றோடு சிறிது கிரானோலா சேர்த்து செய்யப்படும் ஸ்மூத்தி ஆகும். இலவங்கப்பட்டையும், தேனும் உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
தேனை உணவில் சேர்க்கும் போது, கொதிக்க வைப்பதை தவிர்க்க வேண்டும். மாறாக உணவு பதார்த்தங்கள் செய்து முடித்தப் பிறகு தேன் சேர்க்க வேண்டும். கொதிக்க வைக்கப்படும் போது அதில் உள்ள ஊட்டச்சத்துகள் குறையக் கூடும்.