ஐஸ் கியூப் (கட்டி) களை வைத்து முகத்தில் தேய்க்கும் போது முகம் பளிச்சென்று ஆகுமாம். இதன் நன்மைகள் என்னவென்பது குறித்து இப்போ பார்க்கலாம்.
கோடைக் காலங்களில் கொழுத்தும் வெயிலால் உங்களது அழகான முகத்தில் முகப்பருக்கள் ஏற்படலாம். முகப்பருக்கள் வந்தாலே ஒருவிதமான எரிச்சல் நமக்கு வந்துவிடும். கையை வைத்து கொண்டு நம்மால் சும்மாவும் இருக்க முடியாது. எரிச்சல் அதிகமாகும் போது அந்த பருக்களை பிச்சி எடுக்கலாம் என்றும் தோன்றும்.
அவற்றை எளிதாக கையாள வேண்டுமானால் நீங்கள் வேறு அழகு சாதன பொருட்களும் பயன்படுத்தவேண்டாம். கையில் ஐஸ் கியூப் (கட்டி) இருந்தாலே போதும் உங்களது முகப்பரு பிரச்னை எளிதில் தீர்த்து விடலாம்.
அவற்றை எடுத்து உங்கள் முகத்தில் தேய்த்தால் உங்கள் முகம் மிகவும் பிரஷ்ஷாகவும் அதேசமயம் மென்மையாகவும் இருக்கும்.
இவ்வாறு செய்வதால் முகத்தில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
உங்கள் சருமத்தை பளபளக்கச் செய்யுங்கள்:
உங்கள் முகத்தில் ஐஸ் க்யூப்ஸ் தேய்ப்பதால் ஆரம்பத்தில், அது இரத்த ஓட்டங்களை கட்டுப்படுத்தும். ஆனால் விரைவில் உங்களது முகத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். இதன் மூலம் உங்கள் சருமத்தை பார்க்க பிரகாசமாகவும் பளபளப்பாகவும் இருக்க உதவும்.
கருவளையம் குறையும்:
உங்கள் கண்களுக்கு கீழே உள்ள கருவளையங்களை போக்க ஐஸ் க்யூப் உடன் ரோஸ் வாட்டரை வேகவைத்து, அதில் வெள்ளரி சாறு சேர்த்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வேண்டும். அவ்வாறு செய்வதால் முகத்தில் உள்ள கருவளையங்கள் எளிதில் போய்விடும்.

முகப்பருவுக்கு சிறந்த சிகிச்சை:
முகப்பரு வந்தாலே உங்கள் முகம் அழகற்றதாக மாறிவிடும். சரியான நேரத்தில் கையாளப்படாவிட்டால் அது வலியையும் வேதனையையும் ஏற்படுத்தக்கூடும். எரிச்சலூட்டும் முகப்பருவைத் தடுக்க, உங்கள் முகத்தில் ஐஸ் க்யூப்ஸைப் பயன்படுத்த வேண்டும். இதைச் செய்வதால் உங்கள் சருமத்திலிருந்து எண்ணெய் சுரப்பதைக் குறைத்து முகப்பரு தோற்றத்தைக் குறைக்குமாம்.