உலகளவில் பணக்காரர்கள் பட்டியலில் உள்ள ஐந்து கோடீஸ்வரர்களின் ராசி பலன் குறித்து பார்ப்போம்.
உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் எந்த ராசி என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? கடின உழைப்பால் இத்தகைய இடத்தை அவர்கள் பிடித்திருந்தாலும் அவர்களது வெற்றிகளில் அதிர்ஷ்டமும் ராசியும் முக்கிய பங்கு வகிக்கிறது.
உலகளவில் பணக்காரர்கள் வரிசையில் முதல் 250 இடத்தில் உள்ள கோடீஸ்வரர்களின் பெயர்களை பிரபல அமெரிக்க நாளிதழ் ஃபோர்ப்ஸ் வெளியிட்டது. பிரபல ஆங்கில ஊடகம் நடத்திய ஆராய்ச்சியில்
இவர்களிடையே மிகவும் பொதுவாக காணப்படும் ராசி பலன் கண்டறியப்பட்டுள்ளது. இப்பட்டியலில் இடம் பிடித்த ஒவ்வொருவரின் பிறந்த தேதியை பகுப்பாய்வு செய்யப்பட்டு இது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆராய்ச்சியில் உலகின் பணக்கார கோடீஸ்வரர்களிடையே மிகவும் பொதுவான அறிகுறியாக துலாம் ராசி தான் என்பது தெரியவந்தது. 250 கோடீஸ்வரர்களில் 27 பேர் துலாம் ராசியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்த நிலையில், உலகளவில் பணக்காரர்கள் பட்டியலில் உள்ள ஐந்து கோடீஸ்வரர்களின் ராசி பலன் என்னவென்பதை குறித்து பார்ப்போம்.
ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos) – மகரம்
இப்பட்டியலில் 187 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ள பிரபல அமேசான் நிறுவனத்தின் தலைவரும் அதன் சிஇஓவுமான ஜெஃப் பெசோஸ் மகரம் ராசியைச் சேர்ந்தவர்.

மகர ராசிக்காரர்கள் பொதுவாக அறிவார்ந்தவர்களாகவும் பொறுப்புள்ளவர்களாகவும் ஒழுக்கமுள்ளவர்களாகவும் இருப்பர். அவர்களிடம் சுய கட்டுப்பாடு அதிகம் இருக்கும். இந்த பண்புகள் எல்லாம் ஜெஃப் பெசோஸிடமும் தென்படுகிறது.
பிறப்பிலேயே தலைவர்களாகும் குணம் கொண்ட அவர்கள் இப்பட்டியலில் இடம்பெற்றிருப்பது எவ்வித ஆச்சரியமும் இல்லை.
பில் கேட்ஸ் (Bill Gates) – விருச்சிகம்
மைக்ரோசாப்ட்டின் இணை நிறுவனரான பில் கேட்ஸ் இப்பட்டியலில் 121 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இவர் விருச்சிக ராசியைச் சேர்ந்தவர் ஆவார். இந்த ராசிக்காரர்கள் உணர்ச்சிவசப்படுவது, பிடிவாதம், தைரியமானம் மற்றும் வளம் மிகுந்தவர்களாக இருப்பார்கள் என்று நம்பப்படுகிறது.
இந்த குணாதிசயங்கள் அனைத்தும் பில் கேட்ஸூடன் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
மார்க் ஜூக்கர்பர்க் (Mark Zuckerberg) – ரிஷபம்
தற்போதைய நவீன உலகில் பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் ஆட்டிப்படைக்கின்றன. வங்கிகளில் அக்கவுண்ட் வைத்திருக்காதவர்கள் கூட பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் அக்கவுண்ட் இல்லாமல் இருக்க மாட்டார்கள்.

தற்போதைய நவீன உலகில் எப்படி பேஸ்புக் நிறுவனம் ஆட்டிப்படைக்கிறதோ, அதுபோல் அதன் தலைவர் மார்க் ஜூக்கர்பர்க்கும் இப்பட்டியலில் ஆட்டிப்படைக்கும் கோடீஸ்வரராக திகழ்கிறார். 102 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்தில் உள்ள இவர் ரிஷப ராசிக்காரர் ஆவார்.
இந்த ராசிக்காரர்கள் நம்பகமானவர்களாகவும், நிலையானவர்களாகவும் லட்சியத்தை நோக்கி பயணிக்கும் நண்பர்களாகவும் இருப்பர். இதன் எல்லாவற்றுக்கும் மேலாக நேர்மையை மதிக்கும் பண்பு இவர்களிடையே இருக்கும். எப்போதும் தங்களுக்கு சிறந்தது மட்டுமே வேண்டும் என்பதை விரும்பும் குணம் கொண்டவர்கள்.
முகேஷ் அம்பானி (Mukesh Ambani) மேஷம்
12 ராசி பலன்களின் வரிசையில் மேஷம் ராசி தான் முதலில் இருக்கும். அதுபோல இந்திய அளவில் பணக்காரர்களின் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார். இவர் மேஷம் ராசியைப் சேர்ந்தவர் ஆவார்.
சமீபத்தில் இவரது ஜியோ நிறுவனத்தின் 9.9 சதவீத பங்குகளை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியது. அதன் பலனாக அவரது நிறுவனத்தின் பங்குகளும் சொத்து மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனால் இவரது சொத்து மதிப்பு 80.6 பில்லியன் டாலராக அதிகரித்து. இந்திய மதிப்பில் 6.04 லட்சக் கோடியாகும். இதன் மூலம் உலக பணக்காரர்களின் பட்டியலில் எல்.வி.எம்.எஃச் மொய்ட் ஹென்செஸ்ஸி லூயிஸ் வியூட்டன் நிறுவனத்தின் தலைவர் பெர்னார்ட் அர்னால்டைப் பின்னுக்குத் தள்ளி இவர் நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இவரது பெயரில் இன்னொரு சிறப்பம்சமும் உள்ளது. அதாவது முகேஷ் அம்பானி என்கிற பெயரில் கேஷ் பணத்தை குறிக்கிறது. அதேபோல் AMபானி-பானி அதாவது நீர் என இவர்கள் பெயர் முடிவதால் இலக்கை தேடி ஓடிக் கொண்டே இருப்பார்கள் எனவும் கூறப்படுகிறது.
சிம்மம் மற்றும் தனுசு ராசி நேயர்களைப் போலவே மேஷ ராசிக்காரர்களும் உணர்ச்சிமிக்க நபர்களாக இருப்பார்கள்.சட்டென்று கோபமடையும் குணம் கொண்டவர்களாக இருந்தாலும் அவர்களது கோபம் நீண்ட காலம் நீடிக்காது. விளையாட்டுத் துறையில் மேஷ ராசிக்காரர்கள் சிறந்து விளங்குவார்கள் என நம்பப்படுகிறது.
குறிப்பாக ஐபிஎல் தொடரில் முகேஷ் அம்பானியின் மும்பை இந்தியன்ஸ் அணி நான்கு முறை கோப்பை வென்றுள்ளது இதை சுட்டிக் காட்டுகிறது.
பெர்னார்ட் அர்னால்ட் (Bernard Arnault) – மீனம்
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கோடீஸ்வரரும் எல்.வி.எம்.எஃச் மொய்ட் ஹென்செஸ்ஸி லூயிஸ் வியூட்டன் நிறுவனத்தின் தலைவருமான பெர்னார்ட் அர்னால்ட் மீனம் ராசியை சேர்ந்தவர். இவரது சொத்து மதிப்பு சமீபத்தில் கடுமையாக சரிந்துள்ளது.

தற்போதைய சூழலில் (கரோனா வைரஸ் காலம்) இவரது ஃபேஷன் பொருள் தயாரிப்பு நிறுவனமான எல்விஎம்ஹெச் மோயெட் தயாரிப்புகள் பெரும் சரிவைச் சந்தித்ததே இதற்குக் காரணமாகும். 80.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இவர் நான்காவது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு சரிவடைந்துள்ளார்.
மீனம் ராசி காரர்களிடம் இருக்கும் உள்ளுணர்வு, மென்மை, இரக்கம் உன்கிட்ட குணங்கள் இவரிடம் உள்ளது. மேலும் இந்த ராசிக்காரர்கள் கலைநயமிக்கவர்களாக இருப்பார்கள் என்று கூறப்படுவதை போலவே பெர்னார்ட் அர்னால்ட்டின் தொழிலும் உள்ளது.