Home லைப்ஸ்டைல் அழகு & ஆரோக்கியம் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த என்ன செய்யலாம்? 3 பிரதான விஷயங்கள் !

மன ஆரோக்கியத்தை மேம்படுத்த என்ன செய்யலாம்? 3 பிரதான விஷயங்கள் !

மன ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. மனம் ஆரோக்கியமாக இல்லையென்றால் நாம் சிந்திப்பிது, நடந்து கொள்வது, சிக்கல்களை கையாள்வது என அனைத்திலும் தடுமாற்றம் ஏற்படும். வலுவான மனம் உடையவர்கள் ஒரு போதும் ஏமாற்றத்தை சந்திக்க மாட்டார்கள் என்று அர்த்தம் அல்ல, அவர்கள் அதிலிருந்து மீண்டு வரத் தெரிந்தவர்கள் ஆகும். ஆகையால் ஒருவர் மனச் சிக்கலிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமான வாழ்வை வாழ 3 எளிய விஷயங்களை செய்யலாம். இதனை செய்வதால் உங்களது கவனச்சிதறல்கள் மாறி, மனம் நிம்மதி அடையும்.

உட்புற தோட்டக்கலை

தோட்டக்கலை மன ஆரோக்கியத்தைத் திடமாக வைத்துக் கொள்ள உதவும் என்று பல்வேறு ஆய்வு முடிகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. நாம் தாவரங்களை வளர்ப்பதில் கவனம் செலுத்துவது, விதைகளை விதைப்பது, நீர்ப்பாசனம் செய்வது போன்றவை நம் மனதை மன அழுத்தத்திலிருந்து விலக்கி அமைதியடையச் செய்யும். உட்புற தோட்டக்கலை உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், மன அழுத்தத்திலிருந்து ஒருவர் மீளவும் உதவியாக இருக்கிறது என மானிடவியல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் கூறப்பட்டிருக்கிறது.

செடி வளர்க்கப் பயன்படுத்தப்படும் மண் கூட மன ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் என்று கூறுகிறார்கள். அதாவது மைக்கோபாக்டீரியம் தடுப்பூசி எனப்படும் மண்ணில் காணப்படும் ஒரு பாக்டீரியா, நமது மூளையில் சென்று செயல்பட்டு மகிழ்ச்சியான உணர்வை நமக்கு அளிக்கிறது. சாதாரணமாக மரங்கள் வளர்வதற்கு 2 முதல் 3 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். ஆனால் துளசி, பட்டாணி, முட்டைக்கோஸ், கீரை போன்ற வீட்டுச் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் செடிகள் விரைவாக வளரும் திறன் கொண்டது. இந்த செடிகளை நாம் நமது வீட்டில் தினசரி அடிப்படையில் பராமரித்து வருவதால், ஒரு நல்லூனர்வை மனதிற்குள் ஏற்படுத்தி நிம்மதியை தரும்.

சமையல் ஈடுபாடு

ஜர்னல் ஆஃப் பாஸிடிவ் சைகோலாஜியில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், சமையல் மற்றும் பேக்கிங் போன்றவற்றில் தங்களது நேரத்தைச் செலவிடும் மக்கள் அன்றாட வாழ்க்கையில் மகிழ்ச்சியாகவும், நிதானமாகவும் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. உண்மையில் சமையல் கலை ஒருவரின் கவலை, மனச்சோர்வு, மன அழுத்தம் ஆகியவற்றை நீக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது. இது ஒரு வகையில் சந்தோஷத்திற்கான மருந்து என்றே கூட கூறலாம்.

சமைப்பது ஒருவரின் படைப்பாற்றலை ஊக்குவிப்பது மட்டுமின்றி பொறுமையுடனும் செயல்பட உதவுகிறது. மேலும் நமது மன ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய நல்லொழுக்கங்கள். மற்றவர்களுக்காக சமைக்கும்போது உருவாகும் சமூக உணர்வு ஆகியவற்றையும் நம்மில் வளர்க்கிறது.

சுத்தம் செய்தல்

நாம் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது மனரீதியாக நல்ல பயன் தரும். கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், “முடிவு பெறாத திட்டங்கள் உள்ள வீடுகளில் தங்கி வந்த தாய்மார்கள் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகியிருப்பதைக் கண்டறிந்தனர். வாழ்க்கையில் விஷயங்கள் சரிவர இல்லாத நேரத்தில் நாம் மன அழுத்தத்திற்கு ஆளாவதும் வழக்கமான ஒன்று தான். இதனைக் கட்டுப்படுத்த வீட்டைச் சுத்தம் செய்யும் பனியில் ஈடுப்பட்டு பார்க்க வேண்டும்.

சுத்தம் செய்தலை சமையல் அறையிலிருந்து தொடங்குவது நல்லது, ஏனென்றால் அங்குதான் அதிகப்படியான வேலை இருக்கும். சுத்தம் செய்தல் ஒருவரைத் தெளிவுடன் சிந்திக்கவும், செயல்படவும் உதவுகிறது. இதனால் வாழ்வில் எந்த ஒரு குழப்பமான சூழல் உருவானாலும், அதனை திறம்படக் கையாளும் திறமை நம்முள் தானாக உண்டாகும். இதனைக் கொண்டு எவ்வித பிரச்னையும் சமாளிக்க நாம் தயாராகி விடுவோம்.

வாழ்வில் அன்றாட பிர்ச்னைகள் வந்து போவது சகஜம். அதற்காக துவண்டு போவது சரியன்று. ஆகையால் இவ்வழிகளைப் பின்பற்றி பாருங்கள் மன அழுத்தம் நிச்சயம் குறைந்து உங்களது வாழ்வில் நிம்மதியைப் பயக்க உதவும்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

அவுங்க மேட்டரில்ல., ஒரே எதிரி இவுங்கதான்., பொறுத்திருந்த பாருங்கள்: டிடிவி அதிரடி

அமமுக ஆட்டம் ஆரம்பம் என்றே கூறலாம். தமிழகம் கர்நாடகா எல்லையில் தொடங்கி சென்னைவரை சசிகலா வந்துகொண்டிருந்த வழியெல்லாம் அவருக்கு கோலகல வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைதியாக செய்தி பேட்டியில் மட்டும் பார்த்து வந்த அமமுக...

சென்னையில் 10ல் 4 பேருக்கு கொரோனா: ஆய்வில் தகவல்!

சென்னையில் 10ல் 4 பேருக்கு கடந்த காலத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக, ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடி வந்த கொரோனா தொற்று பாதிப்பு, தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. மகாராஷ்டிரா மற்றும் கேரளாவை...

லைசென்ஸ்ச புதுப்பிக்கனுமா? இனி ஆர்டிஓ அலுவலகம் செல்ல வேண்டியதில்லை!

வட்டார போக்குவரத்து அலுவலகம் செல்லாமலேயே, 18 சேவைகளை பெற ஆன்லைன் மூலம் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் எளிதில் சேவைகளை பெற அனைத்து துறைகளும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வட்டார போக்குவரத்து...

தீதி Vs மோடிஜீ: மேற்கு வங்கம் யாருக்கு?

மேற்கு வங்கத்தில் வரும் மார்ச் 27ம் தேதி முதல் 8 கட்டங்களாக 294 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மே மாதம் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு...

Related News

வாக்காளர்கள் இப்படி வந்தால்தான் வாக்களிக்க முடியும்: தேர்தல் ஆணையம் உத்தரவு!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டு. அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மறுபுறம் அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டன. தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என அதிமுகவும், ஆட்சியை கைப்பற்ற...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here