புகைப்படத்திற்கும், புகைப்பட கலைஞர்களுக்கும் பெருமை சேர்க்கவே உலகம் முழுவதும் ஆகஸ்ட் 19ஆம் தேதி புகைப்படத் தினம் கொண்டாடப்படுகிறது, அதிலும் 181ஆவது வருடத்தை கடந்துள்ளது இப்புகைப்படத் தினம். ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளை பேசு, பல கதை சொல்லும் என்பதில் சந்தேகமில்லை. பல நினைவுகளை ஒரே புகைப்படத்தில் அடக்கவும், பல ஆண்டுகள் கழித்து அந்த புகைப்படத்தை காண்கையில், எண்ணிலடங்கா எமோஷன்களையும் நமக்கு உயிர்ப்பூட்டும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.
அப்படி பல உயிர்ப்புகளை தன்னகத்தே கொண்ட புகைப்படம் எனும் போட்டோகிரேபிக்கு கிரேக்க மொழியில் ‘ஒளியின் எழுத்து’ என்று பெயர். உண்மையில் பல எழுத்துக்களை ஒன்றிணைப்பது தான் ஒரு புகைப்படம். எழுத்தில்லா வடிவம் நிறைந்தது புகைப்படம். மனித உறவுகள், இயற்கை, விலங்குகள், நிகழ்ச்சி நிகழ்வுகள், அரசியல் பயணங்கள், விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்டவையில் புகைப்படம் அதிகம் பேசும்.
பலரது நினைவுகளை அன்பு, மகிழ்ச்சி, கண்ணீர், கவலை, பாசம், உணர்வு, உறவு, அழுகை உள்ளிட்ட அனைத்தையும் ஒற்றை புகைப்படத்தில் ஒருசேர இணைக்க முடியும். அது வார்த்தைகளல்லா ஒளியினால் மட்டுமே முடியும். அதனை பெருமை சேர்க்கவே கொண்டாடப்படுகிறது உலக புகைப்பட தினம்…
இப்படி பல உணர்வுகளை கடத்தும் ஒன்றை புகைப்படங்கள் இந்த உலகிற்கு பலவற்றை உணர்த்தியுள்ளது. இப்படியான இந்த ஒற்றை புகைப்படங்கள் மூலம் இந்த உலகிற்கு பல உன்னதாத பாடத்தை கற்றுக்கொள்ளது.
வியட்நாம் சிறுமி:
உடல் முழுவதும் தீக்காயங்களுடன், தனது இரண்டு கைகளையும் நீட்டிக்கொண்டு முகம் முழுக்க பயத்துடன், தனது சகோதரனுடன் இடிவரும் ஓடிவரும் இந்த நிர்வாணச் சிறுமியின் புகைப்படம் 19 ஆண்டுகளாக நடைபெற்ற ஒரு போரையே நிறுத்தியுள்ளது.
இந்த புகைப்படம் எடுத்த பத்திரிகையாளர் நிக் வுட், அந்த சிறுமியை காப்பாற்றி சிகிச்சையும் அளித்தார்.
அமெரிக்க ஆதரவுடன் வடக்கு வியட்நாமை எதிர்த்து, தெற்கு வியட்நாம் போரிட்டபோது, ட்போட்ட நாப்பாம் குண்டினால் தாக்குதலுக்குள்ளான இந்தச் சிறுமி புகைப்படம், நீண்ட விவாதத்துக்குப் பிறகு நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை தனது முதல் பக்கத்தில் இந்தப் படத்தை பிரசுரித்தது. அதன்பின் இதில் உலக நாடுகள் தலையிட்டதால், வியட்நாமிலிருந்து அமெரிக்காவை வெளியேற வைத்து போரை நிறுத்தியது என்றே சொல்லலாம்.
சூடான் சிறுவனுக்காக காத்திருந்த கழுகு:
ஆப்பிரிக்க நாடான வடக்கு சூடான், தெற்கு சூடான் இடையே அடிக்கடி போர் நடக்கும். இதனால் அங்கு பஞ்சம் தலைவிறித்தாடியது. அதனால் எங்காவது ஒரு வேளை உணவு கிடைக்காத என அம்மக்கள் ஏங்கி கொண்டிருப்பார்கள். அப்போது, 1993ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை சார்பாக அந்நாட்டுக்கு உணவு பொருள்கள் கொண்டு செல்லப்படுகிறது. அப்போது பத்திரிக்கையாளர் கெலின் கார்ட்டரும் செல்கிறார்.
இதனையடுத்து அப்பகுதி மக்களுக்கு ஒரு இடத்தில் உணவு கிடைக்கிறது என தகவல் கிடைக்கிறது. இந்த தகவல் கிடைத்த அனைவரும் அந்த இடத்திற்கு விரைந்தனர். அப்போது, எலும்பும், தோலுமான ஒரு குழந்தையும் அங்கு போக முயற்சித்தபோது, முடியாமல் இடையில் சாய்ந்துள்ளது. அதனைக் கண்ட கழுகு அந்த குழந்தையின் இறப்பை எதிர்பார்த்து இருப்பதை கெலின் கார்ட்டர் புகைப்படம் எடுத்துள்ளார்.
இந்த புகைப்படம் தி நீயூயார்க் டைம்ஸில் வெளியாகிறது. பின்னர், இதற்காக 1995ஆம் ஆண்டு கெலின் கார்ட்டருக்கு புலிட்சர் விருது கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, அந்த குழந்தையை காப்பாற்றினீர்களா? என கேள்வி எழுந்தது. இதனால் மனமுடைந்த கெலின் அதே தற்கொலை செய்து கொண்டார்.
இப்படி ஒன்றை புகைப்படங்கள் இந்த உலகிற்கு பலவற்றை உரைத்துள்ளது.