கொரோனா தொற்று பரவலைக் கட்டுபடுத்த பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சிறுகுறு தொழிலில் தொடங்கி பல்வேறு வகை நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய பொருளாதாரமும் பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதை ஈடுகட்ட பிரதமர் மோடி ஆத்ம நிர்பார் சுயசார்பு இந்திய திட்டத்தை அறிமுகம் செய்தார்.
இந்த திட்டத்தின் நோக்கமானது இந்தியாவில் முடங்கிய வர்த்தக செயல்பாடுகளை ஊக்கமளிப்பதே ஆகும். ஆத்மநிர்பார் பாரத் என்ற சுயசார்பு பொருளாதார முயற்சியில் மிகப்பெரிய முன்னெடுப்பை மேற்கொள்ள பாதுகாப்பு அமைச்சகம் தயாராகி வருகிறது. இதுகுறித்து பாதுகாப்பு துறை அமைச்சர் தெரிவிக்கையில், சுமார் 101 வகையான பாதுகாப்பு தளவாடங்களின் தடை பட்டியலை ராணுவம் மற்றும் ராணுவ தொழில்துறையினரின் ஆலோசனைகளுக்கு பிறகு தயாரித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இதில் துப்பாக்கிகள், போர்க்கப்பல்கள், ஹெலிகாப்டர்கள், ரேடார்கள், போக்குவரத்து விமானங்கள் உள்ளிட்ட 101 பொருட்கள் இந்த பட்டியலில் அடங்கும். 2015 ஆம் ஆண்டுமுதல் தற்போது வரை மூன்றரை லட்சம் கோடி மதிப்பிலான அதிநவீன ரேடார்கள், துப்பாக்கிகள் உள்ளிட்டவைகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இதையடுத்து சுமார் 101 பொருட்கள் இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்க முடிவு செயத்தன் நோக்கமானது உள்நாட்டு உற்பத்தியை ஊக்கப்பதே ஆகும். 2020 முதல் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும் இந்த தடை 2024 ஆம் ஆண்டுக்குள் இந்த தடை முழுமையாக அமல்படுத்தப்படும்.
நடப்பு நிதியாண்டில் சுமார் 52 ஆயிரம் கோடி உள்நாட்டிலேயே தளவாடங்களை கொள்முதல் செய்ய நிதி ஒதுக்கப்பட்டுள்ளதையும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சுட்டிக்காட்டியுள்ளார். உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும் இந்திய தொழில்நிறுவனங்களுக்கு வாய்ப்பளிக்கவும் இந்த நடவடிக்கை பாதுகாப்பு அமைச்சகத்தால் எடுக்கப்பட்டுள்ளது.