Home செய்திகள் இந்தியா 9 முதல் 12ஆம் வகுப்பு பாடங்கள் குறைப்பு : சிபிஎஸ்இ அதிரடி நடவடிக்கை !

9 முதல் 12ஆம் வகுப்பு பாடங்கள் குறைப்பு : சிபிஎஸ்இ அதிரடி நடவடிக்கை !

கொரனோ வைரஸ் நோய்த் தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மூடப்பட்டன. அண்மையில் நடைபெறவிருந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு எஸ்எஸ்எல்சி தேர்வுகள் மற்றும் சிபிஎஸ்இ தேர்வுகளும் கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

இந்த ஆண்டிற்கான பள்ளிகள் இந்நேரத்திற்குத் தொடங்கி நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் பள்ளிகள் திறப்பு குறித்து மத்திய அரசு எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை. பல்வேறு தனியார் பள்ளிகளோ ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி இந்த ஓர் ஆண்டு மட்டும் சிபிஎஸ்சி நிர்வாகம் 9-12 ஆம் வகுப்பிற்கான பாடத் திட்டங்களை 30 சதவிகிதம் குறைப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது குறித்து மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது டிவிட்டர் வலைத்தள பக்கத்தில், நாட்டில் நிலவும் அசாதாரணமான நிலையை கருத்தில் கொண்டு 9 முதல் 12 ஆம் வகுப்பு பாடத் திட்டங்களை 30 சதவிகிதம் குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய பாடங்களை தவிர்த்து மற்ற பாடங்கள் குறைக்கப்பட்டிருக்கிறது. இந்த முடிவு குறித்து சில வாரங்களுக்கு முன்பு பல்வேறு கல்வியாளர்களின் கருத்துக்கள் பெறப்பட்டது. இதற்கு ஆயிரத்து 500 பேர் ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், என்றார்.

தவிர்க்கப்பட்ட பாடங்கள்

இதில் முக்கியமாக 11 ஆம் வகுப்பு அரசியில் அறிவியல் புத்தகத்தில் உள்ள கூட்டாட்சி, தேசியம், குடியுரிமை, மதச்சார்பின்மை ஆகிய பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி “உள்ளாட்சி அரசு நிர்வாகம் ஏன் வேண்டும்? இந்தியாவில் உள்ளாட்சி நிர்வாகத்தின் வளர்ச்சி ஆகியவையும் நீக்கப்பட்டுள்ளது. இதுதான் மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய அத்தியாயங்கள், இதையே நீக்கி விட்டால் அவர்கள் படிப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது என பல்வேறு கல்வியாளர்களும், எதிர்க்கட்சியினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்,

மேலும் ஆளும் அரசு தனது ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு ஒரே கல்வி என்கிற சிந்தாந்தை உருவாக்க இந்த திட்டத்தை முன் மொழிவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பகிரங்கமான குற்றச்சாட்டை முன் வைத்து அறிக்கை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

குலை நடுங்குகிறது: வெங்கட்பிரபுவின் “லைவ் டெலிகாஸ்ட்” எப்படி இருக்கு?

வெங்கட்பிரபு இயக்குனராக அறிமுகமாக நினைத்ததும் அவரது முதல் கதை லைவ் டெலிகாஸ்ட் கதைதானாம். இந்த சீரிஸ் ராகவா லாரன்ஸ் நடித்த காஞ்சனா-2-வின் தழுவலாக இருக்கிறது. லைவ் டெலிகாஸ்ட்டில் பேய்யை நேரடியாக மக்களுக்கு காட்ட...

கொரோனா தடுப்பூசி போடும் போதும் ஒரு அரசியல்: மோடி உடனிருந்த நாலு பேர்?

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள, கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், இந்தியாவில், சீரம்...

சர்கார் வியூகம் அமைக்கும் கமல்ஹாசன்: வேறலெவலில் இருக்கப்போகும் தமிழக சட்டப்பேரவை தேர்தல்!

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்படத் தொடங்கியுள்ளன. ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் ஐபேக் பிரசாந்த் கிஷோர் ஆலோசனையில் திமுக செயல்பட்டு வருகிறது. ஆட்சியை தக்கவைக்கும் நோக்கில்...

அன்றே தொடங்கிய பனிப்போர்: ஊசலாடும் புதுச்சேரி காங்கிரஸ் அரசு!

புதுச்சேரியில் அடுத்தடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து வருவதால், முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி தலைமையிலான அட்சி கடந்த 2016ம் ஆண்டில் இருந்து நடைபெற்று...

Related News

இவரை CSK ஏலம் எடுத்ததும் அரங்கமே கைதட்டல் குவிந்தது: அட அர்ஜுன் டெண்டுல்கரும் லிஸ்ட்ல இருக்காரு!

ஐபிஎல் 2021-க்கான ஏலம் விறுவிறுப்பாக சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் டெஸ்ட் போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் புஜாரா ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்கு ஆர்வம் காட்டினார். ஆனால் அவரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை....

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here