Home செய்திகள் இந்தியா ராமருக்கு ஒரு நியாயம்.,ஐயப்பனுக்கு ஒரு நியாயமா?- கடவுளுக்கே பாகுபாடா?

ராமருக்கு ஒரு நியாயம்.,ஐயப்பனுக்கு ஒரு நியாயமா?- கடவுளுக்கே பாகுபாடா?

அயோத்தி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய போது, பெரும்பாலான கட்சிகள் ஆதரவாகவும், சில கட்சிகள் நடுநிலையாகவும், வெகு சில கட்சிகள் எதிராகவும் கருத்து தெரிவித்தன. சட்டம், ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டதா அல்லது வெறும் சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு தீர்ப்பு வழங்கப்பட்டதா, பாபர் மசூதி இடிக்கப்படாமல் இருந்திருந்தால் இதே தீர்ப்பு வந்திருக்குமா என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு இன்றும் பதில் இல்லை.

ஆனால், தீர்ப்பு வந்த ஒன்பதே மாதங்களில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கிவிட்டது. அடிக்கல் நாட்டப்பட்ட நாளில் நாடு முழுவதும் பட்டி, தொட்டியெல்லாம் விழா கோலம் பூண்டது. பாபர் மசூதி இடிப்பில் ஈடுபட்ட உயிருடன் இருக்கும் கர சேவர்கள் பலருக்கு பாராட்டு விழா, ஊர்வலங்கள் நடத்தப்பட்டன.

ram-janambhoomi-pooja

இதனிடையே, நாட்டின் பிரதான அரசியல் கட்சிகளான பாஜகவும், காங்கிரஸும் கோயில் கட்ட நான் தான் காரணம் என போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. ஒரு புறம் பாஜகவின் அத்வானி, விஷ்வ இந்து பரிஷத்தின் அசோக் சிங்கால், மோடி-அமித்ஷா தான் காரணம் என பாஜகவும், ஆர்எஸ்எஸும் கோஷமிட, மற்றொரு பக்கம் அயோத்தியில் சாமி வழிபாட்டிற்கு திறந்துவிட்டதே ராஜீவ் காந்தி தான் என காங்கிரஸ் மார்த்தட்டி கொள்கிறது.

இதில் கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால், மதச்சார்பற்ற நாட்டில் ஒரு மத வழிபாட்டு தளத்தை இடித்து, மற்றொரு மத வழிபாட்டு தளத்தை உருவாக்குதில் புகழ் தேடிக்கொள்ள இரு பிரதான கட்சிகளும் போட்டி போடுகின்றன என்பதே.

இந்த விவகாரத்தில் மேலும் ஒரு டுவிஸ்ட்டாக தென் மாநிலங்கள், வட மாநிலங்கள் என்று பிரித்து, வெவ்வேறு நிலைபாட்டை காங்கிரஸ் எடுத்துள்ளது. ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டுவது தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் கலாச்சார ரீதியான நிகழ்வாக உள்ளது என்று உத்தரப்பிரதேச காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி டுவீட் தட்டிவிட, ராமர் என்றால் நீதி, அவர் ஒரு போதும் அநீதியின் மூலம் வெளிப்படுவதில்லை என்று கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி. ராகுல் காந்தி வேறு மாதிரி கருத்து தெரிவித்தார். கேரளாவில் காங்கிரஸ் கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் கூட்டணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Ram temple design
Ram temple design

நேரு செய்தது, மோடி செய்ய தவறியது –

1951ம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் சோம்நாத் கோயில் திறப்பு விழாவில் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு பங்கேற்கவில்லை. மேலும், அந்த விழாவில் மதச்சார்பற்ற நாட்டின் தலைவர் (குடியரசுத் தலைவர்) பங்கேற்க கூடாது எனவும் அவர் கருத்து தெரிவித்தார். ஆனால், அதை மீறி இடதுசாரி சிந்தனையுடைய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் விழாவில் பங்கேற்று சிறப்பித்தார் என்பது வரலாறு.

மதச்சார்பின்மையின் அரணாக பெரும்பான்மை வகுப்புவாதத்தை தொடர்ந்து எதிர்த்து வந்தவர் ஜவஹர்லால் நேரு. இவரை தொடர்ந்து, மதச்சார்பின்மை என்ற வார்த்தையை அரசியலமைப்பின் முன்னுரையில் சேர்த்தவர் இந்திரா காந்தி. ஆனால், இவர்கள் வம்சாவளியை சேர்ந்தவர்கள் பூணூலை காட்டுவது, மசூதியை இடித்து கோயில் கட்டுவதற்கு ஆதரவு தெரிவிப்பது என வேறு நிலைப்பாட்டை எடுக்கின்றனர்.

அந்த குடும்பத்தை ஒதுக்கிவிட்டு, தற்போதைய அரசின் நிலையை பார்த்தால் அது இன்னும் மோசம். அயோத்தி அடிக்கல் நாட்டு விழா தொடர்பாக, மத்திய அரசிடம் பல்வேறு கேள்விகள் கேட்க வேண்டியிருக்கிறது. கொரோனா காலத்தில் இது போன்ற வெகு விமரிசையான விழா தேவையா, மதச்சார்பற்ற நாட்டின் பிரதமர் ஒரு மதம் சார்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்கலாமா, அப்படி பங்கேற்கலாம் என்றால் அயோத்தியில் மசூதி கட்டும் நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்பாரா, ஒரு வேலை பங்கேற்றால் ஒவ்வொரு மாநிலத்திற்கு ஏற்ப தொப்பி அணியும் மோடி, இஸ்லாமிய தலைப்பாகை அணிவாரா?

ராமருக்கு ஒரு நியாயம், ஐயப்பனுக்கு ஒரு நியாயம் –

அயோத்தி விவகாரத்தில் கோயில் கட்ட எதிர்ப்பு தெரிவிக்கும் வெகு சில கட்சிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஒன்று. இந்த கட்சியின் ஆட்சி தான் கேரளாவில் நடந்து வருகிறது. முதலாளித்துவம் மற்றும் அடக்குமுறையை எதிர்க்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஏனோ பெண் சுதந்திரத்திற்கு ஆதரவு தருவதில்லை.

அயோத்தி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வெகு விரைவாக நிறைவேற்றும் பாஜக, சபரிமலை தீர்ப்பை மதிப்பதில்லை. ஒரு புறம் சபரிமலையில் தரிசனம் செய்ய விரும்பும் பெண்கள் மீது பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பு தாக்குதல் நடத்துகிறது என்றால், மற்றொரு புறம் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க மாட்டோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு கைக்கட்டி வேடிக்கை பார்க்கிறது. இந்துத்துவ கொள்கை, பெரும்பான்மை அரசியலில் இருந்து நீந்தி வெளியே வர முடியாமல் அனைத்து கட்சிகளும் தத்தளிக்கின்றன.

இதில், சுவாரஸ்யம் என்னவென்றால் சபரிமலை விவகாரத்தில் தீர்ப்பை மதிக்காத மாநில அரசு மீது தாமாக முன் வந்து அவமதிப்பு வழக்கு தொடராத உச்சநீதிமன்றம், கொரோனா காலத்தில் பல முக்கிய வழக்குகளை விடுத்து மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசண் மீது அவமதிப்பு வழக்கு விசாரணையை மேற்கொள்வது தான். அரசும், நீதித்துறையும் ஒன்றை ஒன்று பாதுகாத்து செயல்பட்டால், அரசியலமைப்பு என்னும் வேலியை உடைத்து பயிரை மேய்ந்தது போலாகிவிடும் என்பதை மறந்துவிட கூடாது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

சர்கார் வியூகம் அமைக்கும் கமல்ஹாசன்: வேறலெவலில் இருக்கப்போகும் தமிழக சட்டப்பேரவை தேர்தல்!

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்படத் தொடங்கியுள்ளன. ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் ஐபேக் பிரசாந்த் கிஷோர் ஆலோசனையில் திமுக செயல்பட்டு வருகிறது. ஆட்சியை தக்கவைக்கும் நோக்கில்...

அன்றே தொடங்கிய பனிப்போர்: ஊசலாடும் புதுச்சேரி காங்கிரஸ் அரசு!

புதுச்சேரியில் அடுத்தடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து வருவதால், முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி தலைமையிலான அட்சி கடந்த 2016ம் ஆண்டில் இருந்து நடைபெற்று...

இவரை CSK ஏலம் எடுத்ததும் அரங்கமே கைதட்டல் குவிந்தது: அட அர்ஜுன் டெண்டுல்கரும் லிஸ்ட்ல இருக்காரு!

ஐபிஎல் 2021-க்கான ஏலம் விறுவிறுப்பாக சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் டெஸ்ட் போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் புஜாரா ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்கு ஆர்வம் காட்டினார். ஆனால் அவரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை....

சிங்க பெண்ணே எழுந்து வா மொமெண்ட்: சவுதியில் பெண்கள் ராணுவத்தில் சேர அனுமதி!

சவுதி அரேபியாவில் பெண்கள் ராணுவத்தில் சேர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், அந்நாட்டில் தொடர்ச்சியாக பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். முகமது பின் சல்மானின் முயற்சியால்,...

Related News

நடுக்கடலில் குதித்த ராகுல்காந்தி: அதிர்ந்து போன பாதுகாப்பு அதிகாரிகள்!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினராவர். இவர் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக கேரளா சென்றிருந்தார். கேரளா சென்ற ராகுல்காந்தி அங்குள்ள மீனவர்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். ராகுல்காந்தி மீனவர்களுடன்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here