Home செய்திகள் இந்தியா நீட் தேர்வை தள்ளி வைக்கக் கோரி பிரதமருக்கு சுப்பிரமணிய சுவாமி கடிதம்!

நீட் தேர்வை தள்ளி வைக்கக் கோரி பிரதமருக்கு சுப்பிரமணிய சுவாமி கடிதம்!

நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகளை தீபாவளிக்கு பிறகு நடத்திட வேண்டும் என பாஜக மூத்த தலைவரும் எம்பியுமான சுப்பிரமணிய சுவாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கரோனா வைரஸால் மனிதர்களின் அன்றாட வாழ்க்கை முறை முற்றிலும் மாறியுள்ளது. இப்பெருந்தொற்று காரணமாக நாட்டில் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

BJP MP subramanya swamy urges pm to conduct NEET and JEE exams after divali

இந்நிலையில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சேருவதற்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு (NEET) எழுதி வேண்டும் என்பது மாணவர்களின் தலைவிதி. பல்வேறு மாநிலங்களின் நீட் தேர்வுக்கு எதிர்ப்புகள் இருந்தபோதிலும் கடந்த கடந்த 4 ஆண்டுகளாக நீட் தேர்வு மத்திய அரசால் நடைபெற்று வருகிறது.

NEET and JEE exams after Deepawali
NEET and JEE exams after Deepawali

கரோனா வைரஸ் காரணமாக தள்ளி வைக்கப்பட்டு இருந்த நீட் தேர்வு வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் ஜே.இ.இ முதன்மை தேர்வும் செப்டம்பர் 1 முதல் ஆறாம் தேதி வரை நடைபெறும் எனவும் மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்த சூழலில் தேர்வுகளை ஒத்திவைக்குமாறு மாணவர்கள் தாக்கல் செய்த மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் தேர்வுகள் மீண்டும் ஒருமுறை தள்ளி வைக்கப்பட்டதால் மாணவர்களின் ஒரு வருடம் வீணாகிவிடும் எனவும் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

BJP MP subramanya swamy
BJP MP subramanya swamy

இந்நிலையில் தீபாவளி பண்டிகைகளுக்குப் பிறகு நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகளை நடத்திடமாறு பாஜக மூத்த தலைவரும் எம்பியுமான சுப்ரமணிய சுவாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் அவர், பொதுப் போக்குவரத்து தொடங்கப்படதாக இந்த சூழலில் தேர்வு எழுதுவதற்காக மாணவர்கள் பல கிலோ மீட்டர் பயணம் செய்து தேர்வு மையங்களுக்கு வந்து செல்வது மிகவும் சிரமம். அரசின் இந்த அறிவிப்பு நாடு முழுவதும் உள்ள மக்களை தற்கொலைக்கு வழிவகுக்கும்.

இதனால் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகளை தீபாவளிக்கு பிறகு நடத்திட வேண்டும். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்திற்கு அறிவுறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக நீட் தேர்வுக்காக பயிற்சி மையத்தில் தயாராகி வந்த கோவையைச் சேர்ந்த 19 வயது மாணவி சுபஸ்ரீ தற்கொலை செய்து கொண்டுள்ளார். தேர்வு அழுத்தம் காரணமாக அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே நீட், ஜே.இ.இ தேர்வுகள் நடத்துவது குறித்த இறுதி முடிவை மத்திய அரசு நாளை எடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. சுப்பிரமணிய சுவாமியின் வேண்டுகோளை ஏற்று மத்திய அரசு தேர்வுகளை தள்ளி வைக்குமா அல்லது திட்டமிட்டபடி தேர்வுகளை நடத்துமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Attachments area

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

குலை நடுங்குகிறது: வெங்கட்பிரபுவின் “லைவ் டெலிகாஸ்ட்” எப்படி இருக்கு?

வெங்கட்பிரபு இயக்குனராக அறிமுகமாக நினைத்ததும் அவரது முதல் கதை லைவ் டெலிகாஸ்ட் கதைதானாம். இந்த சீரிஸ் ராகவா லாரன்ஸ் நடித்த காஞ்சனா-2-வின் தழுவலாக இருக்கிறது. லைவ் டெலிகாஸ்ட்டில் பேய்யை நேரடியாக மக்களுக்கு காட்ட...

கொரோனா தடுப்பூசி போடும் போதும் ஒரு அரசியல்: மோடி உடனிருந்த நாலு பேர்?

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள, கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், இந்தியாவில், சீரம்...

சர்கார் வியூகம் அமைக்கும் கமல்ஹாசன்: வேறலெவலில் இருக்கப்போகும் தமிழக சட்டப்பேரவை தேர்தல்!

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்படத் தொடங்கியுள்ளன. ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் ஐபேக் பிரசாந்த் கிஷோர் ஆலோசனையில் திமுக செயல்பட்டு வருகிறது. ஆட்சியை தக்கவைக்கும் நோக்கில்...

அன்றே தொடங்கிய பனிப்போர்: ஊசலாடும் புதுச்சேரி காங்கிரஸ் அரசு!

புதுச்சேரியில் அடுத்தடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து வருவதால், முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி தலைமையிலான அட்சி கடந்த 2016ம் ஆண்டில் இருந்து நடைபெற்று...

Related News

இவரை CSK ஏலம் எடுத்ததும் அரங்கமே கைதட்டல் குவிந்தது: அட அர்ஜுன் டெண்டுல்கரும் லிஸ்ட்ல இருக்காரு!

ஐபிஎல் 2021-க்கான ஏலம் விறுவிறுப்பாக சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் டெஸ்ட் போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் புஜாரா ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்கு ஆர்வம் காட்டினார். ஆனால் அவரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை....

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here