மத்திய இங்கிலாந்தின் நாட்டிங்ஹாமில் உடற்பயிற்சி இயக்கத்தைத் துவக்கி வைத்த அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சான், ஹீரோ வைக்கிங் ப்ரோ சைக்கிளையும் ஓட்டினார்.
கொரோனா நோய்த் தொற்றால் பிரிட்டனில் பலர் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கின்றனர். அந்நாட்டு பிரதமரையும் தொற்றிக் கொண்டது இந்த கோவிட் 19. இருப்பினும் அதிலிருந்து போரிஸ் ஜான்சான் வெற்றிகரமாக மீண்டு வந்துள்ளார்.
இந்நிலையில் அண்மையில் மத்திய இங்கிலாந்தின் நாட்டிங்ஹாமில் உடற்பயிற்சி இயக்கம் ஒன்றை துவக்கி வைத்தார். சைக்கிளிங் மற்றும் நடைப்பயணம் செய்வதால் ஒருவரின் ஆரோக்கியம் பன்மடங்கு மேம்படுகிறது என்பதால் அதற்கான பிரத்தியேக சாலைத் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.
மேலும் இந்திய ஹீரோ மோட்டார்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் ஹீரோ வைகிங் ப்ரோ சைக்கிளையும் ஒட்டினார். இது குறித்து தனது வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்த அவர், நாம் எதிர்கொள்ளும் உடல் பிரச்னைகள் மற்றும் சுற்றுச்சூழல் சவால்களை சமாளிப்பதில் சைக்கிள் ஓட்டுதல் மற்றும் நடைப்பயிற்சி பெரும் பங்கு வகிக்கிறது.
இந்த 2 பில்லியன் செலவில் அமைக்கப்பட உள்ள சைக்கிளிங் திட்டத்திற்கான பாதைகள் சைக்கிள் ஓட்டுதலை ஊக்குவிக்கும், மேலும் கற்றுக்கொள்ள விரும்புவோருக்குப் பயிற்சி அளிக்க உதவிக்கரமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.