சீனா, ஹுபே மாகாணத்தின் வூஹான் நகரில் தான் முதன் முதலில் கோவிட்-19 எனப்படும் கொரோனா நோய்த் தொற்று பரவுத் தொடங்கியது. இந்த நோயால் சீனாவில் இதுவரை 83 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய்த் தொற்று சீனாவில் மட்டுமின்றி 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. இதனால் உலகம் முழுவதும் 1 கோடியே 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்புகளோ 5 லட்சத்தை தாண்டியுள்ளது.
சீனாவில் கொரோனாவின் முதல் அலை ஓய்ந்து இரண்டாவது அலை ஆரம்பித்திருக்கிறது. இந்நிலையில் அங்குப் புதிதாக இன்னொரு வைரஸ் நோய் தோற்றும் வந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது பூபோனிக் என்ற பிளேக் நோய், பன்றிகள் மூலம் பரவுவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது குறித்த அதிகாரப்பூர்வ செய்தி அந்நாட்டு அரசு நாளிதழில் வெளியானது.
வட சீனாவில் உள்ள மங்கோலியாட் பிரேதச்சத்திற்கு உட்பட்ட பயனூர் பகுதியில் உள்ள ஆடு மேய்க்கும் ஒருவருக்கு இந்த நோய்த் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதன் பின்னர் அவரது சகோதரருக்கும் இந்த நோய்த் தொற்று பரவி இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களோடு தொடர்பில் இருந்த மேலும் 146 பேரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த தோற்று நோய் மர்மோட் எனும் பெரிய அணில் வகை இறைச்சியை உண்டதால் ஏற்பட்டிருக்கிறது. ஆகையால் அந்நாட்டு மக்கள் இந்த இறைச்சியை உட்கொள்ள வேண்டாம் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியிருக்கின்றனர். இதுவும் கொரோனாவை போன்று காய்ச்சல்,தலைவலி, சளி,இருமல், தொண்டை வலி போன்ற அறிகுறிகளைக் கொண்டது. ஆகையால் பொதுமக்கள் அலட்சியமாக இருக்காமல் அறிகுறி தென்பட்டால் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த வைரஸ் நோய் தொற்றுக்கு ஆளாகி முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ள வில்லை என்றால் 24 மணி நேரத்தில் உயிரிழக்க நேரிடம் அபாயம் இருப்பதாக உலக சுகாதார அமைப்பும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிளேக் நோய் வரலாறு
இந்த பூபோனிக் எனப்படும் பிளேக் நோய்த் தொற்றை கருப்பு மரணம் என்றும் அழைப்பர். கடந்த நூற்றாண்டுகளில் இந்த நோய்த் தொற்று பல்வேறு உயிர்களை பலி கொண்டிருக்கிறது. அப்போது நோய் குறித்த புரிதல் இல்லாத காரணத்தால் பலரை காப்பாற்ற இயலாமல் போயிற்று. ஆனால் தற்போதுள்ள அறிவியல் வளர்ச்சி இந்த நோய்த் தொற்றிலிருந்து அனைவரையும் பாதுகாக்க இயலும்.
அதற்கு உதாரணமாக கூற வேண்டும் என்றால் கடந்த 2017 ஆம் ஆண்டு மடாகாஸ்கரில் இந்த நோய்த் தொற்றுக்கு ஆளான 300 பேரில் 30 பேருக்கும் குறைவான நோயாளிகளே உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.