கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகின்றன. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்று முகக்கவசம், கையுறை அணிதல். அதோடு கொரோனா பரவலுக்கு ஏற்ப ஊரடங்கானது தளர்வுகளோடு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
வாழ்வாதாரத்தை இழந்த மக்கள்:
கொரோனா ஊரடங்கால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து பலரும் தவித்து வருகின்றனர். உச்சத்தில் இருந்தவர் திடீரென வேலை இழந்து கடனாளியாக மாறும் நிகழ்வு இந்த கொரோனா காலங்களில் அரங்கேறியுள்ளது.
கொரோனா முடிவை எதிர்நோக்கி:
கொரோனா தொற்று எப்போது முடிவுக்கு வரும் நிலைமை எப்போது சீராக மாறும் என பல்வேறு கேள்விகள் பொதுமக்களிடையே எழுந்து வருகிறது. கொரோனாவுக்கு முன் பின் என காலங்கள் இரண்டாக பிரிக்கப்படும் அளவிற்கு காலங்கள் மாறியுள்ளது.
அனைத்து இடத்திலும் மாஸ்க் விற்பனை:
கொரோனாவை கட்டுபடுத்த மாஸ்க்குகள், கையுறைகள் ஆரம்பத்தில் மருத்துவமனைகளில் மட்டுமே விற்கப்பட்டு வந்தாலும் தற்போது சிறியரக ஜவுளி கடைகள் பலசரக்கு கடைகள் ரோட்டோர கடைகள் என அனைத்து பகுதிகளிலும் விற்கப்படுகிறது.
கண்துடைப்புக்கு அணியும் மாஸ்க்:
என் 95 மாஸ்க்குகளை அணிவது பாதுகாப்பு என வலியுறுத்தி வந்தாலும் சிலர் அரசு உத்தரவுக்கு இணங்க ஏதாவது மாஸ்க் அணிந்தாலும் போதும் என பனியன் துணிகளில் தயாரிக்கப்படும் பத்து ரூபாய் மாஸ்க்குகளை அணிகின்றனர். மருத்துவத்துறையில் இருப்பவர்கள் உட்பட பெரும்பாலானோர் கையுறை அணிவதும் கட்டாயம்.
சர்ஜிக்கல் கையுறைகள் விதிமுறைகள்
மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படும் சர்ஜிக்கல் கையுறைகளை ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி பின்பு பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும் என்பது அவசியம். கையுறையின் வெளிப் பகுதிகளில் பெரும்பாலான கிருமிகள் தொற்றி இருக்கும் எனவே கைப்படாமல் அதை அப்புறப்படுத்துவதே வழக்கம்.
மும்பையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்:
மருத்துவர்கள் பயன்படுத்தும் கையுறைகளில் இருந்து நோய்த் தொற்று பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது என்பதால் அதை விதிமுறைகளை பின்பற்றி அப்புறப்படுத்த வேண்டும் என்பது வழக்கம். இந்த நிலையில் மும்பையில் நடந்த ஒரு சம்பவம் பலரையும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பயன்படுத்தப்பட்ட கையுறைகள் சலவை செய்து விற்பனை:
நவி மும்பை பகுதியில் மருத்துவர்கள் பயன்படுத்தும் சர்ஜிக்கல் கையுறைகளை சேகரித்து விற்று வந்த ஒரு கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த கும்பல் சர்ஜிக்கல் கையுறைகளை நன்றாக சலவை செய்து புதுசு போன்றே மாற்றி விற்பனை செய்து வந்துள்ளனர்.
கொரோனா முடிவுக்கு வருமா என்பது சந்தேகம்தான்:
இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் மருத்துவர்கள் பயன்படுத்தும் அதே கையுறைகள் தான் இந்தியாவின் சில பகுதிகளில் கொரோனா வார்டில் உள்ள ஊழியர்களுக்கும், கொரோனா பரவலைத் தடுக்கும் பணியில் உள்ள நிர்வாகிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கும்பல் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.