கொரோசர் எனப்படும் குறைந்த மதிப்பிலான கோவிட் 19 சோதனை கருவியை டெல்லி ஐஐடி உருவாக்கியுள்ளது. உலகிலேயே முதல் முறையாக மலிவு விலையில் ஆர்.டி-பிசிஆர் அடிப்படையிலான கோவிட் -19 கண்டறியும் கருவி தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்த கருவியை நியு மெடிக்கல் நிறுவணம் கொரோசர் எனும் பெயரில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதன் மொத்த விலை 650 ரூபாய் மட்டுமே, மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து பிரயோகிப்பதை விட இது மிகவும் மலிவானது.
இது குறித்து ஐஐடி டெல்லி இயக்குநர் வி ராம்கோபால் ராவ் , தயாரிப்பு அளவு மற்றும் அதன் விலை பொறுத்தவரையில் இந்த கருவி உலகளவில் பெரும் மாற்றத்தை உண்டாக்கும். நியூட்டெக் மெடிக்கல் டிவைசஸ் நிறுவனம் மூலம் எங்களது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு மாதத்திற்கு இரண்டு மில்லியன் சோதனைகளை மிகவும் மலிவான விலையில் செய்ய முடியும். இறக்குமதி இல்லாமல் உள்நாட்டிலேயே தயாரித்து நேராக சந்தைப்படுத்துவதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு”என்றார்.
இந்த தயாரிப்புக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஆகிய இரண்டும் ஒப்புதல் அளித்துள்ளன.
இது குறித்து இன்று தனது வலைத்தளப்பக்கத்தில் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், இணை அமைச்சர் சஞ்சய் தோத்ரே உடன் சேர்ந்து உலகின் மிகவும் மலிவு விலையில் தயாரிக்கப்பட்டிருக்கும் ஆர்டி-பி.சி.ஆர் அடிப்படையிலான கோவிட் நோய்த் தொற்றை கண்டறியும் கருவியை அறிமுகப்படுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார். இதனை தயாரித்த டெல்லி ஐஐடி குழுவினருக்கு தனது பாராட்டுக்களையும் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்தார்.
முன்னதாக இந்தியாவில் ஆர்டி-பி.சி.ஆர் சோதனை கருவிக்கு 2,200 ரூபாயிலிருந்து 3,000 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டு வந்தது. இதுவும் ஆரம்பக் காலத்தில் அதிக சோதனைகள் மேற்கொள்ளாமல் இருந்ததற்கு முக்கிய காரணமாக அமைந்தது. மேலும் பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா என்ற திட்டம் இது போன்ற கண்டுபிடிப்புகளால் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் பொதுஜன மக்களுக்கு கொரோனாவிலிருந்து நிச்சயம் மீண்டுவிடுவோம் என்ற தன்னம்பிக்கையும் அதிகரித்து வருகிறது.