Home செய்திகள் அரசியல் ஆள விடுங்க சாமி: கரையும் காங்கிரஸ்.,விலகும் காந்தி குடும்பம்!

ஆள விடுங்க சாமி: கரையும் காங்கிரஸ்.,விலகும் காந்தி குடும்பம்!

காந்தி குடும்பத்தை சேராத ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக வேண்டும் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

*கரையும் காங்கிரஸ்*

வலுவான ஆட்சியில் அசராத எதிர்க்கட்சி அவசியம். குரல் வளை நெறிக்கப்படும் போது, மக்களின் குரலாக விமர்சனம் அவசியம். ஆனால், இந்தியாவில் இன்று முதுகெலும்பு இல்லாத எதிரணியும், அரசியல் வெற்றிடமுமே நிலவுகிறது. மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநில சட்டசபை தேர்தல் வெற்றிகள், காங்கிரஸ் கட்சியில் உருவாக்கிய நம்பிக்கை ஒலியை, தொடர் மக்களவை தேர்தல் தோல்வி அனைத்துவிட்டது. சொந்த தொகுதியான அமேதியில் கூட வெற்றி பெற முடியாமல் ராகுல் காந்தி தத்தளித்தார். 2014 மக்களவை தேர்தலை விட அதிக தொகுதிகளை கைப்பற்றிய நிலையிலும், எதிர்க்கட்சி அந்தஸ்து காங்கிரஸுக்கு எட்டாக்கனியானது. இதனிடையே, கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பெரும்பான்மை பெற்றும் ஆட்சி அமைக்க முடியாமல் போனது. கர்நாடகா, மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் குதிரை பேர விளையாட்டில் ஆட்சி பறிபோனது.

*பதவி விலகிய ராகுல்*

காங்கிரஸின் கோட்டையில், தனது சொந்த தொகுதியில், தனக்கென வாக்கு சேகரிக்க முடியாத ராகுல் காந்தி கட்சியை எப்படி வழி நடத்துவார் என விமர்சனங்கள் கட்சிக்கு வெளியே எழுந்தன. இதைத்தொடர்ந்து, 2019 மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, கடந்த ஆண்டு ஜூலையில் ராகுல் காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி காங்கிரஸின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றார். ஆனால், தலைவராக இல்லாத போதிலும் கட்சியின் முகமாக ராகுல் காந்தி செயல்பட்டு வருகிறார். வெளியில் இருந்து கட்சியை நிர்வகித்தும், முக்கிய முடிவுகளை எடுத்தும் வருகிறார். ராஜஸ்தானில் அதிருப்தியில் இருந்த சச்சின் பைலட்டுடனான சமரச பேச்சுவார்த்தையிலும் ராகுல் காந்தி முன்னிலை வகித்தார்.

*இந்தியாவுக்கு காங்கிரஸ் தேவையா?*

இந்தநிலையில், கட்சி தலைமையில் வெற்றிடம், சொற்ப வெற்றிகள் என கரைந்து வரும் காங்கிரஸ் கட்சி இந்தியாவுக்கு தேவையா என்ற கேள்வி எழுகிறது. காங்கிரஸ் கட்சியின் மோசமான இரு தோல்விகள் என்று எடுத்துக் கொண்டால், அது 2014, 2019 மக்களவை தேர்தல்கள் தான். 2014 மக்களவை தேர்தலில் பாஜக 31.34% வாக்குகளையும், காங்கிரஸ் 19.52% வாக்குகளையும் பெற்றன. 3.84% வாக்குகளுடன் மூன்றாவது இடத்தில் மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உள்ளது. 2019 மக்களவை தேர்தலில் பாஜகவின் வாக்குகள் 37.36% ஆக அதிகரித்துள்ளது. காங்கிரஸின் வாக்குகள் 19.01% ஆக குறைந்தாலும், சவுகரியமாக இரண்டாம் இடத்தில் உள்ளது. இம்முறையும் 4.07% வாக்குகளுடன் திரிணாமுல் காங்கிரஸ் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. தேசிய அளவில் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களில் உள்ள கட்சிகள் இடையே 16 -17% வாக்கு வத்தியாசம் நிலவுகிறது. வறண்ட காலத்திலும் கூட காங்கிரஸ் சராசரியாக 20% வாக்குகளை பெற்று வருகிறது. பாஜக மற்றும் காங்கிரஸுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவிற்கு வலுவான மூன்றாம் அணி அல்லது கட்சி தற்போது இந்தியாவில் இல்லை. இதனால், பாஜகவின் வலிமையை சமநிலை செய்ய காங்கிரஸ் கட்சி தேவை என்பதே நிதர்சனம்.

*முழு நேர தலைவர் அவசியம்*

தலைவர் பதவியில் இருந்து விலகிய போதிலும், காங்கிரஸ் கட்சியை பின்னால் இருந்து நிர்வகித்து வருகிறார் ராகுல் காந்தி. கொரோனா தொற்று, ஊரடங்கு குறித்து துறை சார்ந்த வல்லுநர்களுடனான உரையாடல்கள், கொரோனா, லடாக் விவகாரங்களில் மத்திய அரசின் செயல்பாடுகளை கட்சி சார்பில் முன் நின்று விமர்சிப்பது, பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளை மேற்கொள்வது என திரைக்கு பின் நின்று கட்சியை இயக்கி வருகிறார். ஆனால், பாஜகவுடன் போட்டி போட காங்கிரஸுக்கு முழு நேர தலைவர் மிகவும் அவசியம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இது தொடர்பாக அவ்வப்போது கட்சி தலைமையிடம் கோரிக்கை வைக்கப்பட்டாலும், ராகுலுக்கு மிகவும் நெருக்கமான ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸில் இருந்து விலகிய பிறகு, முழு நேர தலைவருக்கான கோரிக்கை மேலோங்கி ஒலித்து வருகிறது.

*விலகும் காந்தி குடும்பம்*

இந்தநிலையில், இந்தியாவின் அடுத்த தலைமுறை தலைவர்களை பற்றிய புத்தகத்தில், பிரியங்கா காந்தி தெரிவித்த கருத்துகள் தற்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது. இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ள பேட்டியில் அவர் கூறியதாவது, “காங்கிரஸ் கட்சியின் தலைவராக காந்தியின் குடும்பத்தில் இருந்து யாரும் வரக்கூடாது என்ற ராகுல் காந்தியின் கருத்தை நான் ஆதரிக்கிறேன். கட்சி அதன் பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும். காந்தி குடும்பத்தைச் சாராத ஒரு தலைவரின் வழிகாட்டுதல்களை பின்பற்றி செயல்பட தயாராக உள்ளேன். உத்தரப்பிரதேசத்தில் இருந்து என்னை அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு மாற்றினாலும், அங்கு சென்று கட்சி பணிகளை ஆர்வத்துடன் செய்வேன்”, என்றார்.

*காந்தி குடும்பம் அல்லாத லிஸ்டில் யார் இருக்கிறார்?*

தேசிய கட்சிகளில் தென்னிந்திய பிரதிநிதித்துவம் இல்லை என்ற குற்றச்சாட்டு காலங்களை கடந்து நிலைத்து நிற்கிறது. இதற்கு காங்கிரஸ் கட்சி ஒன்றும் விதிவிலக்கில்லை. இதனால், தென்னிந்தியாவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள் மல்லிகார்ஜுன கார்கே, கே.சி. வேணுகோபால், ப.சிதம்பரம் மற்றும் முன்னாள் கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டிக்கு தலைவர் பதவி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல, காஷ்மீரை சேர்ந்த குலாம் நபி அசாத், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், சோனியா காந்திக்கு நெருக்கமான அகமது படேல் ஆகியோரும் தலைவர் பதவி போட்டியில் முன்னிலையில் உள்ளனர். ஆனால், அதிகார ஆசைகள், கருத்து வேறுபாடுகள், சாதி, மத பாகுபாடுகளை களைந்து இவர்களால் கட்சியை ஒன்றிணைந்து வழி நடத்த முடியுமா என்பது கேள்விக்குறியே!

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

வாக்காளர்கள் இப்படி வந்தால்தான் வாக்களிக்க முடியும்: தேர்தல் ஆணையம் உத்தரவு!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டு. அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மறுபுறம் அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டன. தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என அதிமுகவும், ஆட்சியை கைப்பற்ற...

ஸ்ரீரெட்டிக்கு அடித்த ஜாக்பாட்: அந்த நடிகையின் வாழ்க்கை வரலாறு படத்துக்கு இவுங்கதான் சரி!

தெலுங்கு திரையுலகில் நடிக்க வாய்ப்புக்காக நடிகைகளை பலாத்காரம் செய்யும் பழக்கம் இருக்கிறது என்ற புகார்களோடு தமிழகத்துக்குள் நுழைந்த ஸ்ரீரெட்டி தமிழ் திரையுலகில் விஷால், ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து...

ஏன் 120/80 இருந்தால் நார்மல் ரத்த அழுத்தம்., இது ஒவ்வொருவருக்கும் வேறுபடுமா?

முன்பெல்லாம் 50 வயதுக்கு மேற்பட்ட சில நபர்களுக்கு மட்டுமே ரத்த அழுத்தம் இருப்பதாக கேள்விப்பட்டிருப்போம். தற்போது, 30 வயதுடையவர்கள் கூட பி.பி. இருப்பதாக சர்வ சாதாரணமாக கூறிவிட்டு செல்கின்றனர். இதனால், ரத்த அழுத்தம்...

சசிகலா விஷயத்தில் மௌனம்: தனி ரூட்டில் பயணிக்கும் ஓபிஎஸ்!

பெங்களூரு சிறையிலிருந்து விடுதலையான சசிகலா குறித்து இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்காமல், துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் ஓ.பன்னீர்செல்வம் மௌனம் காத்து வருகிறார். சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த...

Related News

பொதுநலன் கருதி “தூது”- தேர்தல் நேரத்தில் இதெல்லாம் சந்திக்கனும்- உஷார் மக்களே!

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவித்த நாளில் இருந்தே தேர்தல் நடத்தை விதிகள் அமல் படுத்தப்பட்டது. தங்களது பகுதிகளில் திடீரென சாலைகள் முளைக்கும். முளைக்கும் சாலைகள் பாதியோடு அறுபட்ட நிலையில் இருக்கலாம் காரணம்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here