தமிழுக்கு செம்மொழி மகுடம்சூட்டி, கலைஞர் என்ற அடைமொழியோடு திராவிடத்தின் எடுத்துக்காட்டாகவும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர் கருணாநிதி. திமுக-வின் புகழ் மேலோங்கச் செய்ய பிரதான காரணங்களில் ஒரு பெயர் கருணாநிதி. தமிழகத்தின் முதலமைச்சர் இருக்கையில் அமர்ந்தாலும் நாடாளுமன்றத்தில் தன் கருத்தை அதிரச்செய்யும் வல்லமை பெற்றவர்.
பல்வேறு புகழைக் கொண்ட கருணாநிதியின் மறைவுக்கு பிறகு அவரது வாரிசான முக ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ளார். தனது பேச்சால் இளைஞர்களையும் மக்களையும் ஈர்க்கும் வல்லமை படைத்த கருணாநிதியின் இடத்தில் தற்போது அமர்ந்திருப்பவர் மு.க ஸ்டாலின்.
கரகரத்த குரல், கருப்பு கண்ணாடி, மஞ்சள் துண்டு என்றால் உடனடியாக நியாபகத்திற்கு வருவது கருணாநிதிதான். கருணாநிதி மறைவுக்கு பிறகு அவரது இடத்தில் அமர்ந்திருக்கும் மு.க ஸ்டாலின் தலைமுடி தோரணைக்கு விக் வைத்திருப்பது சமூகவலைதளங்களில் விவாதமாகி வருகிறது.
இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகிரத்துக் கொண்டே வருகிறது. இதை தடுக்க மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மறுபுறம் எதிர்கட்சி என்ற முறையில் திமுக வீடியோ கான்பரன்ஸ் கூட்டம் நடத்தப்பட்டு தமிழகத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை செய்து வருகிறது.
இந்த நிலையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் புதிதாக விக் வைத்து வீடியோ கான்பரன்ஸ் கூட்டம் நடத்தியுள்ளார். மக்கள் வேலைகளை இழந்து தவித்து வரும் இந்த நேரத்தில் தங்களின் இளமையை வெளிப்படுத்தும் பகுமானச் செயல் தேவைதானா என கேள்விகளை சமூகவலைதளவாசிகள் முன்வைத்து வருகின்றனர்.
மக்கள் மீது அக்கறை காட்டும் எதிர்கட்சி தலைவர் செய்யும் வேலையா இது., பேரிடர் காலத்தில் புது வைக் வைத்து தங்களின் அழகையும் இளமையையும் வெளிப்படுத்தும் நேரம் இதுதானா., ஒருபக்கம் அரசை விமர்சித்து மறுபக்கம் விக் வைத்து சைட் போஸ் கொடுப்பது மிக அவசியமா என சமூகவலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. மேலும் இதுதொடர்பாக பல மீம்களும் வைரலாகி வருகிறது.