கைலாசா நாட்டில் ஹோட்டல் திறக்க அனுமதி கோரி நித்யானந்தாவிற்கு கடிதம் எழுதிய ஹோட்டல் உரிமையாளர்.
கைலாசா என்ற நாட்டை உருவாக்கி வருவதாக கூறி வரும் நித்தியானந்தா, ஆட்கடத்தல், கொலை வழக்கு, பாலியல் புகார் உட்பட பல்வேறு புகார்களில் சிக்கியவர். கைலாசா நாட்டிற்கென தனி கரன்சிகளையும், ரிசர்வ் வங்கி ஆஃப் கைலாசா என்பது குறித்த அறிவிப்பையும் வெளியிட்டார்.

மேலும் கைலாசா நாட்டில் வணிக செயல்பாடுகளை தொடங்க மதுரை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என குறிப்பிட்டார். வாடிகன் பேங்கை மையமாக வைத்து ரிசர்வ் வங்கி ஆஃப் கைலாசா செயல்படும் எனவும் வெளிநாட்டு பரிவர்த்தனைகளுக்கு தனி கரன்சி வடிவமைப்பு, 300 பக்க பொருளாதார கொள்கை என அடுத்த அடுத்தக் கட்டத்தை நோக்கி சென்று கொண்டே இருக்கிறார்.
முன்னதாக கைலாசா நாட்டில் உணவக கிளை தொடங்க அனுமதி கோரி மதுரை பிரபல ஹோட்டல் உரிமையாளர் கடிதம் எழுந்தியிருந்தார். மதுரை பிரபலமான ஹோட்டல்களில் ஒன்று டெம்பிள்சிட்ட, இதன் நிறுவனர் குமார் நித்தியானந்தாவிற்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் நித்யானந்தா பக்தர்களை கவர புதிய யுக்திகளை கையாள்வதை போல கைலாசா மக்களை ஈர்க்கும் வகையில் மாஸ்க் புரோட்டா , கொரோனா தோசை உள்ளிட்டவற்றை கைலாசாவில் விற்பனை செய்ய தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த கடிதத்தில் முகவரி குறிப்பிடாத நிலையில் செய்தியாளர்கள் மூலமாக எப்படி கைலாசா நாடுகளின் அறிவிப்புகள் வெளியிடப்படுகிறதோ அதேபோல் இந்த கடிதமும் நித்தியானந்தாவை சென்றடையும் என நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்து பேசிய நித்தியானந்தா கைலாசா நாட்டில் வணிக செயல்பாடுகளை தொடங்க மதுரை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என குறிப்பிட்டார்.