லெபனான் பெய்ரூட் துறைமுகப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர குண்டு வெடிப்பில் இதுவரையில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர்.
மத்திய கிழக்கு நாடான லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று பயங்கர வெடி விபத்து ஏறப்பட்டுள்ளது. இதனையடுத்து வெடி விபத்து ஏற்பட்ட அந்த துறைமுக பகுதி முழுவதுமாக புகை மண்டலமானது. துறைமுகத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் தரைமட்டமானது, அதுமட்டுமின்றி இதன் தாக்கம் 200 கிமீ வரையிலான சுற்று வட்டார பகுதியிலும் தென்பட்டது. இந்த வெடி விபத்தில் 70 பேர் உயிரிழந்துள்ளனர், 4 ஆயிரம் பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் இந்த வெடி விபத்திற்கான காரணம் துறைமுக சேமிப்பு கிடங்கில் இருந்த 2750 டன் அமோனியம் நைட்ரேட் என்பது தெரியவந்துள்ளது. இங்த துறைமுகத்தில் 6 ஆண்டு காலமாக எந்த ஒரு பராமரிப்பும் இன்றி மிகுந்த நச்சுத்தன்மை கொண்ட இந்த வேதிப் பொருள் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.
இது குறித்து அந்நாட்டு பிரதமர் ஹசன் டயப், இந்த சேமிப்பு கிடங்கள் மிகச் சக்தி வாய்ந்த வேதிப்பொருள் இருந்தது தனக்கு தெரியாது என்றும் இது குறித்து நிச்சயம் விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிக்கு கண்டிப்பாக தண்டனை வழங்கப்படும் என்று கூறியிருக்கிறார்.
மேலும் நட்பு நாடுகள் தங்களுக்கு உதவுமாறும் அழைப்பு விடுத்துள்ளார். இதனையடுத்து அமெரிக்க, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் உதவ முன் வந்துள்ளது. இந்த கோர விபத்திற்கு அவசரகால நிதியிலிருந்து 100 பில்லியன் லிரா விடுவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.