10 நிமிடங்களில் கொரோனா வைரஸ் தாக்கத்தினை கண்டுபிடிக்கும் புதிய சென்சார் கண்டுபிடிப்பிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் முதல் உலகம் முழுவதையும் உலுக்கி வரும் கொரோனா வைரஸின் பரவல் இன்னும் குறைந்தபாடில்லை. இந்த வைரஸ் தாக்கத்தினை கண்டுபிடிப்பதற்குள் மற்றொரு நபர்களுக்கும் வேகமாக பரவி அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு வேகமாக பரவும் கொரோனா வைரஸ் தாக்கத்தினை கண்டறிவது தொடர்பில் பல்வேறு ஆய்வுகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் வெறும் 10 நிமிடங்களில் கொரோனா வைரஸ் தாக்கத்தினை உறுதிப்படுத்தக்கூடிய வகையில் நவீன சென்சார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா தொழில்நுட்ப கழகத்தின் (Caltech) ஆராய்ச்சியாளர்களே இதனை உருவாக்கியுள்ளனர். கார்பனால் உருவாக்கப்பட்ட இந்த வயர்லெஸ் சென்சார் ஆனது இரத்தம், உமிழ்நீர் மற்றும் வியர்வை என்பவற்றில் ஏற்படும் மாற்றங்களை கண்காணிப்பதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்றினை உறுதிப்படுத்தக்கூடியதாக இருக்கின்றது.