பாலிவுட் போதை பொருள் சர்ச்சையில் பிரபல நடிகை தீபிகா படுகோனே சிக்கி உள்ளார்.
தோனி பட நாயகன் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி மும்பையில் உள்ள தனது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார். மன அழுத்தம் காரணமாக அவர் உயிரை மாய்த்துக் கொண்டார் என கூறப்பட்டாலும், அவரது மரணத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், அவரது காதலி ரியா சக்ரபர்த்தி மீது பல குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.
இந்த வழக்கில், பாலிவுட் நடிகர்கள் போதை பொருளை பயன்படுத்தியது குறித்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ரியா சக்ரபர்த்தி கைது செய்யப்பட்டுள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சாரா அலி கான், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்ட பல நடிகர்களின் பெயர்களை அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த நடிகர்களும் விரைவில் விசாரணைக்கு அழைக்கப்படலாம் எனவும் சொல்லப்படுகிறது.
இந்தநிலையில், பாலிவுட்டில் பூதாகரமாக வெடித்துள்ள போதை பொருள் சர்ச்சையில், தீபிகா படுகோனே சிக்கி உள்ளார். இது தொடர்பாக வெளியான 2017ல் நடந்த வாட்ஸ்அப் உரையாடலில், தீபிகா படுகோனே மால் போன்ற விஷயங்களை K என்ற நபரிடமிருந்து கேட்டிருக்கிறார். இதில், இடம்பெற்றுள்ள K என்ற நபர் தீபிகாவின் மேனேஜர் கரிஷ்மா என கூறப்படுகிறது. இதனால், இது தொடர்பாக விசாரிக்க தீபிகா மற்றும் கரிஷ்மாவுக்கு போதை பொருள் தடுப்பு பிரிவு விரைவில் சம்மன் அனுப்ப வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
இதனிடையே, தீபிகா படுகோனேவை தாக்கி நடிகை கங்கனா ரணாவத் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “ போதை பொருட்களை பயன்படுத்தினால் மன அழுத்தம் வரத்தான் செய்யும். சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருக்கும் க்ளாசியான நல்ல முறையில் வளர்க்கப்பட்ட ஸ்டார் குழந்தைகள் அவர்களது மேனேஜர் இடம் மால் குறித்து கேட்பார்கள்,”என கூறியுள்ளார்.