நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க கடவுளுக்காக வாச்சும் இதை செய்யுங்கள் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அவரது கணவர் பரக்கலா பிரபாகர் அறிவுரை வழங்கியுள்ளார்.
ரஃபேல் விவகாரத்தில் மத்திய பாஜக அரசு மீது கரை படியாமல் இருக்க பாய்ந்து பாய்ந்து பதிலளித்தவர் நிர்மலா சீதாராமன். இதற்காக அவருக்கு பரிசளிக்கும் வகையில், ஏற்கனவே பட்ஜெட் தாக்கல் செய்த அனுபவம் கொண்ட பியூஷ் கோயலுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, அமைச்சரவையின் மிக முக்கிய பொறுப்பான மத்திய நிதியமைச்சர் பதவி நிர்மலா சீதாராமனுக்கு வழங்கப்பட்டது.
ஆனால், மத்திய நிதியமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்தே நிர்மலா சீதாராமன் தொடர்ந்து பொறுப்பற்ற கருத்துக்களை தெரிவித்து வருகிறார். “நான் அதிகம் வெங்காயம் சாப்பிட மாட்டேன். வெங்காயத்தை பற்றி நாங்கள் பெரிதாக கவலைப்படுவது இல்லை”, “வாகன துறையின் வீழ்ச்சிக்கு இக்கால இளைஞர்களின் மனநிலையே காரணம்” என்பது போன்ற பல சர்ச்சை கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்.
ஒவ்வொரு முறையும் அவர் தெரிவிக்கும் பொறுப்பற்ற கருத்துக்களை #SayItLikeNirmalaTai என்ற ஹாஷ்டேக் மூலம் நெட்டிசன்கள் மீம்ஸ்களை தெறிக்கவிடுகின்றனர். அந்த வகையில், கொரோனா என்பது கடவுளின் செயல் என்றும், கொரோனா காரணமாக ஜிஎஸ்டி வருவாயில் பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது எனவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் கருத்து தெரிவித்தார்.
இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க கடவுளுக்காக வாச்சும் இதை செய்யுங்கள் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அவரது கணவரும், பொருளாதார நிபுணருமான பரக்கலா பிரபாகர் அறிவுரை வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக பரக்கலா பிரபாகர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “பொருளாதார சவால்களை சமாளிக்க அரசிடம் யோசனைகள் இல்லாததே உண்மையான ‘கடவுளின் செயல்’. கொரோனா தாமதமாகவே வந்தது. 2019 அக்டோபரில் நான் கூறிய 23.9% பொருளாதார சுருக்கம் நிரூபணமாகியுள்ளது. இப்போதாவது கடவுக்காக ஏதாவது செய்யுங்கள்” என கூறியுள்ளார்.